

கரோனா வைரஸ் விவகாரத்தில் உலகின் கவனத்தை திசை திருப் பவே எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா படைகளை குவித்து வருவதாக மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
கரோனா வைரஸால் உலகின் பெரும்பாலான நாடுகள் பாதிக்கப் பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இருந்துதான் கரோனா வைரஸ் தொற்று பரவியதாகவும் இது குறித்து உலக சுகாதார நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு நாடுகள் வலி யுறுத்தியுள்ளன.
இதனிடையே, லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய எல்லைக்குள் தவ்லத் பெக் ஓல்டி பகுதியில் விரைவான ராணுவ போக்குவரத்து வசதிக்காக இந்தியா சாலை அமைத்து வருகிறது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி யில் சீனா படைகளை குவித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அமைச் சர் வி.கே. சிங் கூறுகையில்,
‘‘கரோனா வைரஸ் தொடர்பாக சீனா விசாரணை வளையத்தில் உள்ளது. கரோனா வைரஸ் பரவ சீனாதான் காரணம் என்று ஒட்டு மொத்த உலகமும் குற்றம்சாட்டி வருகிறது. பல்வேறு பெரிய நிறு வனங்கள் சீனாவில் இருந்து வெளி யேறுகின்றன. எனவே, கரோனா வைரஸ் விவகாரத்தில் உலகின் கவனத்தை திசை திருப்பவே எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி யில் சீனா படைகளை குவிக்கிறது. இதுபோன்ற செயலை சீனா பலமுறை செய்துள்ளது’’ என்றார்.