தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான சாதகமான சூழல்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான சாதகமான சூழல்: வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

தெற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா பகுதியிலும் அடுத்த 48 மணி நேரங்களில் தென்மேற்கு பருவமழை முன்னேறுவதற்கான சூழல் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உம்பன் புயலுக்கு பிறகு நாடுமுழுவதும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்ப நிலை மிகவும் வாட்டி வதைக்கும் நிலையில் மேலும் ஒருவாரத்திற்கு அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

தலைநகரான டெல்லியில் தொடர்ந்து வெப்பம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. அதிகபட்சமாக டெல்லி பாலம் விமான நிலையத்தில் நேற்று 47.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்த வெப்பநிலை படிப்படியாக குறையும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் தெற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா பகுதியிலும் அடுத்த 48 மணி நேரங்களில் தென்மேற்கு பருவமழை முன்னேறுவதற்கான சூழல் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறியுள்ளதாவது:

மேகமூட்டம் அதிகரித்துள்ளதாலும், இடை நிலை வெப்ப வளி மண்டல அளவுக்கு தென்மேற்கு காற்று தீவிரமடைந்துள்ளதால் தென்மேற்கு பருவமழை தெற்கு வங்காள விரிகுடாவின் மேலும் பல பகுதிகளிலும், அந்தமான் கடலில் பல பகுதிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் இன்று முன்னேறியுள்ளது.

மாலத்தீவு–காமரின் பகுதியில் சில இடங்களிலும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியிலும், அந்தமான் கடலில் இதர பகுதிகளிலும், தெற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா பகுதியிலும் அடுத்த 48 மணி நேரங்களில் தென்மேற்கு பருவமழை முன்னேறுவதற்கான சூழல் நிலவுகிறது.

தெற்கு சத்தீஸ்கர் முதல் தமிழகத்தின் உள் பகுதிகள் வரையிலான அலைகள் தற்போது ராயலசீமாவிலிருந்து தமிழகத்தின் உள்பகுதிகள் வரை, கடல் மட்டத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் வரை விரிவடைந்துள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in