தாய் இறந்ததை அறியாத குழந்தை எழுப்ப முயன்ற நெஞ்சைப் பிசையும் காட்சி வைரல்: பிஹார் ரயில் நிலையத்தில் கொடுமை

தாய் இறந்ததை அறியாத குழந்தை எழுப்ப முயன்ற நெஞ்சைப் பிசையும் காட்சி வைரல்: பிஹார் ரயில் நிலையத்தில் கொடுமை
Updated on
1 min read

பிஹாரின் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் விவரம் அறியா குழந்தை ஒன்று இறந்து போன தன் தாயை எழுப்ப முயன்ற நெஞ்சைப் பிசையும் வீடியோ காட்சி ஒன்று சமூகவலத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தக் குழந்தை மற்றும் இறந்த தாயார் குறித்த இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது, அதாவது புலம்பெயர் தொழிலாளர்கள் வறுமை, கடும் வெயில் போன்றவற்றைத் தாங்க முடியாமல் மடியும் அவலத்துக்கும் நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் துயரங்களையும் பறைசாற்றும் ஒரு காட்சியாக அனைவரும் இதனைக் கருதி பகிர்ந்து வருகின்றனர்.

இறந்த தாயின் மேல் கிடக்கும் போர்வைக்குள் புகுவதும் பிறகு வெளியே வருவதுமாக அந்தக் குழந்தையின் செயல் பலரையும் வேதனைப்படுத்துவதாக அமைந்துள்ளது. போர்வையை இழுத்துப் பார்க்கும் குழந்தை எதற்கும் அசையாத தாயின் உடல், இவர் இதற்குச் சற்றுமுன் பசியினாலும் தாகத்தினாலும் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது தொடர்பாக என்.டி.டிவி வெளியிட்டுள்ள செய்தியில்,

23 வயதான இந்த இறந்த பெண் புலம்பெயர்ந்தோர் சிறப்பு ரயிலில் திங்களன்று பிஹார் முசாபர்பூர் வந்தார்.

இதே ரயில் நிலையத்தில்தான் ஞாயிறன்று 2 வயது குழந்தை போதிய உணவு இல்லாமலும் கடும் வெயிலிலும் மரணமடைந்தது.

இந்தப் பெண்ணின் குடும்பத்தினர், உணவும் குடிநீரும் இன்றி உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாகத் தெரிவிக்கின்றனர். இந்தப் பெண் குஜராத்தில் ரயிலைப் பிடித்துள்ளார் திங்களன்று முசாபர்பூர் வந்தவுடன் மயங்கி விழுந்துள்ளார். இவரது உடல் நடைமேடையில் கிடக்க குழந்தை தாயார் இறந்தது தெரியாமல் எழுப்ப முயன்றதோடு விளையாடியும் உள்ளது. பிறகு கொஞ்சம் பெரிய பையன் வந்து குழந்தையை அழைத்துச் சென்றான், என்று கூறப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சகம் இவர் ரயிலிலேயே இறந்ததாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பெண் கதிஹாருக்கு தன் சகோதரி, சகோதரியின் கணவன் 2 குழந்தைகளுடன் சென்றதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in