Last Updated : 27 May, 2020 12:42 PM

 

Published : 27 May 2020 12:42 PM
Last Updated : 27 May 2020 12:42 PM

தீவிர லாக்டவுன் அனுசரித்தால் இந்தியாவின் பொருளாதாரம் விரைவில் சீரழிந்து விடும்: ராகுல் காந்தியிடம் கூறிய ஸ்வீடன் நிபுணர்  

ராகுல் காந்தி, ஸ்வீடன் நிபுணர் ஜோஹன் ஜீஸெக்.

ஸ்வீடன் கரோலின்ஸ்கா கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோஹன் ஜீஸெக், ராகுல் காந்தியுடனான சமூக வலைத்தள உரையாடலில் கூறும்போது இந்தியா தீவிர லாக்டவுனைக் கடைப்பிடித்தால் அதன் பொருளாதாரம் வெகுவிரைவில் சீரழிவை நோக்கிச் செல்லும் என்று எச்சரித்தார்.

“இந்தியாவைப் பொறுத்த மட்டில் கண்டிப்பான, தீவிர லாக்டவுன் அதன் பொருளாதாரத்தை வெகு விரைவில் பேரழிவுக்கு இட்டுச் செல்லும். பூரண லாக்டவுன் இந்தியாவில் தீங்கையே விளைவிக்கும். நன்மை பயக்காது.

இந்தியாவில் மென்மையான லாக்டவும் நடைமுறைகளே ஒத்து வரும். ஒவ்வொன்றாக தளர்வுகளைப் படிப்படியாகக் கொண்டு வர வேண்டும். ஆனாலும் லாக்டவுனிலிருந்து முழுதும் விடுபட சில மாதங்கள் பிடிக்கும்.

உலக நாடுகள் பலவற்றுக்கும் லாக்டவுனுக்குப் பிறகு என்ன என்பதே தெரியவில்லை. கரோனா வைரஸ் உலகம் முழுதும் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இருந்தாலும் இது ஒரு சாதாரண நோய்தான் , நோய்த்தொற்று உள்ளவர்களில் 99% குறைந்த அறிகுறிகளுடன் இருக்கின்றனர் அல்லது அறிகுறியே இருப்பதில்லை” என்றார்.

ஹார்வர்ட் குளோபல் சுகாதார கழகத்தின் இயக்குநர் அஷீஷ் ஜா கூறும்போது, “கரோனா வைரஸ் பரிசோதனைகளை இந்தியா பெரிய அளவில் முடுக்கி விட்டால்தான் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும், அப்போதுதான் லாக்டவுனுக்குப் பிறகு பொருளாதாரம் திறந்தாலும் மக்களிடையே நம்பிக்கை இருக்கும். குறிப்பாக அதிக கரோனா பாதிப்பு இருக்கும் ஹாட்ஸ்பாட்களில் டெஸ்ட்டிங் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும்.

தென் கொரியா, தய்வான், ஹாங்காங் ஆகிய நாடுகள் கரோனாவுக்கு சரியாக எதிர்வினையாற்றுகிறார்கள், அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், யுகே மோசமாக வினையாற்றினார்கள்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x