மூன்று வாக்சின்கள் நல்ல பலன்களுக்கான அறிகுறிகள் காட்டுகின்றன: ராகுல் காந்தியிடம் மருத்துவ நிபுணர் அஷீஷ் ஜா

ராகுல் காந்தி, ஹார்வர்ட் வல்லுநர் அஷீஷ் ஜா.
ராகுல் காந்தி, ஹார்வர்ட் வல்லுநர் அஷீஷ் ஜா.
Updated on
1 min read

பொருளாதாரம், கரோனா வைரஸ் தாக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து உரையாடி வருகிறார். அந்த வகையில் ஹார்வர்ட் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநர் அஷீஷ் ஜா என்பவருடன் உரையாடினார்.

இதில் கரோனா சிகிச்சையில் வாக்சின்கள் பல ஆய்வில் இருந்து வருவது பற்றி கூறிய அஷீஷ் ஜா, “3 வாக்சின்கள் நல்ல நம்பிக்கை அளிக்கும் பலன்களுக்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளன. அமெரிக்கா, சீனா மற்றும் ஆக்ஸ்போர்ட் ஆகியவற்றில் தயாரிக்கப்படும் வாக்சின்கள் ஆகும் இது.

இவை மூன்றும் நம்பிக்கையூட்டுகின்றன. இதில் ஒன்று அல்லது மூன்றுமே கூட கரோனா தடுப்பு வாக்சினாக உருவாக வாய்ப்புள்ளது, அடுத்த ஆண்டு வாக்சின் தயாராகி விடும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மக்களுக்கு இந்த வாக்சின்களை கிடைக்கச் செய்வதில் இந்திய அரசு திட்டமிடுவது அவசியம்” என்றார் அஷீஷ் ஜா.

ராகுல் காந்தி இந்த உரையாடலில் கூறும்போது வைரஸுக்குப் பிறகு புதிய உலகத்தை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

“கோவிட்-19- தாக்கியுள்ள மிகவும் பலவீனமான பகுதிகள் உலகமயமாதலின் மையப்பகுதிகளாகும். இந்த வைரஸுக்குப் பிறகு புதியதோர் உலகத்தை நாம் எதிர்கொள்ள நேரிடும். ஐரோப்பாவை மறு வடிவத்துக்குட்படுத்தும்.

அமெரிக்கா, சீனா இடையே அதிகாரச் சமனிலையில் மாற்றம் ஏற்படும். 9/11 தாக்குதல் எப்படி புதிய அத்தியாயமோ, கரோனா ஒரு புதிய புத்தகம்” என்றார் ராகுல் காந்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in