பெற்ற மகனே மறுக்க, இந்து மதத்தைச் சேர்ந்த முதியவருக்கு முஸ்லிம்கள்  இறுதிச் சடங்கு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

மகாராஷ்ட்ராவில் மாரடைப்பினால் மரணமடைந்த முதியவருக்கு முஸ்லிம்கள் இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளனர்.

மகாராஷ்ட்ரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் இந்துவான 78 வயது முதியவரின் மனைவி கரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில்தான் முதியவர் மாரடைப்பினால் மரணமடைந்தார். முதியவரின் மகனிடம் தகவல் தெரிவிக்கப்பட நாக்பூரில் இருந்த மகன் தந்தையின் உடலைப் பெற மறுத்து விட்டார்.

இந்தத் தகவலை அறிந்த அகோலா குச்சி மேமன் ஜமா அத் முஸ்லிம் அமைப்பினர். முதியவரின் உடலைப் பெற்று இந்து முறைப்படி இறுதிச் சடங்குகளை நடத்தி முதியவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

இது தொடர்பாக ஜமா அத் தலைவர் ஜாவேத் ஜகேரியா ஊடகத்தாரிடம் தெரிவிக்கும் போது, “ஊரடங்கு காலத்தில் இறந்தவர்களின் உடலை ஏற்க குடும்பத்தினர் மறுத்தால் அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய முடிவெடுத்தோம்.

இதுவரை கரோனாவினால் இறந்த 21 பேர் உட்பட 60 பேருக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளோம். இதில் 5 பேர் இந்துக்கள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in