Published : 27 May 2020 07:08 AM
Last Updated : 27 May 2020 07:08 AM

வட மாநிலங்களில் விவசாயிகளுக்கு புதிய அச்சுறுத்தல்- வேளாண் பயிர்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள்

இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள பாலைவன வெட்டுக்கிளிகள், வடமாநிலங்களில் விவசாய பயிர் களையும் பசுந்தாவரங்களையும் நாசம் செய்து வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பயிர்கள், பசுந்தாவரங்கள், தீவனச் செடிகளை கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்து தின்று பெருமளவு நாசம் விளைவிப்பவை பாலைவன வெட்டுக் கிளிகள். நாடு விட்டு நாடு ஊடுரு வும் இந்த வெட்டுக்கிளிகள், வரும் வழியில் காணப்படும் புல்வெளி கள், விவசாய பயிர்கள், மேய்ச்சல் நிலங்களில் காணப்படும் புல், பூண்டுகள் என அனைத்தையும் தின்று பேரழிவை ஏற்படுத்துகின் றன. இதனால் விவசாயிகள் உள் ளிட்ட லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்தியா, ஆசியா நாடுகளின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா நாடுகளில் வெட்டுக்கிளிகள் பெரும் பேரழிவை ஏற்படுத்துகின்றன. விரைவாக இனவிருத்தி செய்வது இவற்றின் இயல்பு. கணக்கில டங்கா எண்ணிக்கையில் கூட்டம் கூட்டமாக இவை பறந்து வரும். ஒரு சதுர கி.மீ. பரப்பளவுக்குள் சுமார் 15 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

ஒரு சதுர கி.மீ. பரப்பளவு பகு திக்குள் இருக்கும் வெட்டுக்கிளிகள் கூட்டம், ஒரு நாளில் சுமார் 35 ஆயிரம் பேருக்கு தேவையான உணவுப் பயிர்களை தின்று காலி செய்துவிடும் என ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் தெரிவிக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் எத்தி யோப்பியா, கென்யா, சோமாலியா ஆகிய பகுதிகளில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் ஆயிரக்கணக் கான ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாய பயிர்களையும், புல்வெளி களையும், மேய்ச்சல் பூமியையும் நாசம் செய்துள்ளன. 2019 ஜூன் மாதத்தில் ஈரானில் இருந்து பாகிஸ் தானுக்குள் நுழைந்த வெட்டுக்கிளி கள் பருத்தி, கோதுமை, சோளம் போன்ற பயிர்களை தின்று நாசம் செய்தன. நவம்பருக்குள் வெட்டுக் கிளிகள் பிரச்சினை அடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது பொய்த்துப்போனது.

இந்த மாத தொடக்கத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் பரவிய வெட்டுக்கிளிகள் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற இந் தியாவின் பல மாநிலங்களிலும் பாகிஸ்தானின் தென்பகுதியிலும் ஈரானிலும் நுழைந்து உணவுப் பயிர்களையும் தாவர இனங்களையும் நாசம் செய்து வரு கின்றன.

பாகிஸ்தான் வழியாக இந் தியாவுக்குள் நுழைந்த வெட்டுக் கிளிகள், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியாணா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு படையெடுத்தன. இந்த பிராந் தியத்தில் பல்கிப் பெருகியுள்ள வெட்டுக்கிளிகளின் அச்சுறுத் தலை எதிர்கொள்ள ஒருங் கிணைந்து செயல்திட்டம் வகுத்து செயல்படுவோம் என பாகிஸ் தானுக்கும் ஈரானுக்கும் இந்தியா யோசனை தெரிவித்துள்ளது.

வெட்டுக்கிளிகளை அழிக்க தீயணைப்பு வாகனங்கள், டிராக்டர் கள், ஜீப்களை பயன்படுத்தி ரசாயன மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. ராஜஸ்தானில் நிலைமை மோச மாக இருப்பதால் ரசாயன மருந்து தெளிப்பு பணியில் ட்ரோன்களை பயன்படுத்த வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை அமைப்பு உத்தர விட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x