

சிறப்பு ரயில்கள் தவிர ஜூன் 1-ம் தேதி முதல் முதல் புதுடெல்லியை இணைக்கும் 15 இணை சிறப்பு ரயில்களையும், அட்டவணையிடப்பட்டபடி மேலும் 200 ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், இதர நபர்கள் ஆகியோரை சிறப்பு ரயில்கள் மூலம் ஏற்றிச்செல்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த ஆணையை அடுத்து, இந்திய ரயில்வே மே 1-ம் தேதி முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்திருந்தது.
25 மே 2020 வரையிலான காலத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மொத்தம் 3274 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலமாக 44 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் தங்களது சொந்த மாநிலங்களுக்குச் சென்றடைந்துள்ளனர். மே 25-ம் தேதி அன்று 223 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் 2.8 லட்சம் பயணிகளுடன் ஓடிக்கொண்டிருந்தன.
பயணம் செய்த புலம்பெயர்ந்தோருக்கு ஐஆர்சிடிசி, 74 லட்சம் இலவச உணவும் ஒரு கோடி குடிநீர்க் பாட்டில்களும் வழங்கியது.
இன்று ஓடிக் கொண்டிருக்கும் ரயில்கள் எந்தவித நெரிசலுக்கும் உள்ளாகவில்லை
சிறப்பு ரயில்கள் தவிர ஜூன் 1-ம் தேதி முதல் முதல் புதுடெல்லியை இணைக்கும் 15 இணை சிறப்பு ரயில்களையும், அட்டவணையிடப்பட்டபடி மேலும் 200 ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.