

இந்திய எல்லை பகுதியில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில் துது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு அந்நாட்டு வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக இந்தியா தரப்பில் புகார் கூறப்படுகிறது.
அவர்களை சமாளிக்க இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர்.