Published : 26 May 2020 09:01 am

Updated : 26 May 2020 09:01 am

 

Published : 26 May 2020 09:01 AM
Last Updated : 26 May 2020 09:01 AM

சோனியா, ராகுல், பிரியங்கா காந்தியை லாக்டவுன் முடியும்வரை  தனிமைப்படுத்த வேண்டும்: பாஜக எம்.பி. ஆவேசம்; முட்டாள் தனமான பேச்சு-காங். பதிலடி

bjp-mp-hits-out-at-gandhis-for-triggering-panic-amid-covid-19-pandemic
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்த, எம்.பி. ராகுல் காந்தி: கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவிவரும் நேரத்தில் மக்களிடையே பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் பேசுவதைத் தடுக்க சோனியா காந்தி, அவரின் மகன், மகள்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை லாக்டவுன் முடியும் வரை தனிமை முகாமில் வைக்க வேண்டும் என்று டெல்லி மேற்கு பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார்

டெல்லி மேற்கு பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா நிருபர்களுக்கு காணொலி மூலம் நேற்று அளித்த பேட்டியி்ல் கூறியதாவது:

“ கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி லாக்டவுன் கொண்டுவரப்பட்டது. அப்போது இருந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மத்திய அரசு செய்யும் பணிகளில் தவறு கண்டுபடித்து, மக்களை பதற்றப்படுத்தும் வகையில் பேசி வருகிறார்கள். ஏற்கெனவே பல்வேறு சவால்களைச் சந்தித்துவரும் மக்கள் இவர்களின் ேபச்சால் மேலும் அச்சத்துக்கு ஆளாகிறார்கள்.

பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா

லாக்டவுன் தோல்வி அடைந்துவிட்டது என்று இப்போது சோனியா காந்தி குடும்பத்தார் பேசி வருகிறார்கள். ஏற்கெனவே கரோனா நோயால் பாதிக்கப்பட்டும், அந்த நோய்க்கு அஞ்சியும், வாழ்வாதாரத்தை இழந்தும் மக்கள் துன்பத்தில் இருக்கும்போது லாக்டவுன் தோல்வி அடைந்துவிட்டது என பேசுகிறார்கள்.

இதுபோன்று மக்களை பதற்றப்படுத்தும் பேச்சுக்களை தடுப்பதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மூவரையும் தனிமை முகாமில் லாக்டவுன் முடியும் வைக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்” இவ்வாறு வர்மா தெரிவித்தார்

இதற்கு பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் கட்சியி்ன் டெல்லி மாநிலத் தலைவர் அனில் குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:

“ நாடாளுமன்றத்தி்ன் உறுப்பினராக பொறுப்புள்ள பதவியில் இருக்கும் வர்மா, லாக்டவுன் வெற்றிகரமான நடவடிக்கை என்றால் ஏன் லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகிறார்கள் என்று மத்திய அரசிடம் கேட்க வேண்டியதுதானே.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களைத் தாக்கிப் பேசுவதற்கு பதிலாக, ஏன் பொருளாதாரம் சீரழிந்தது என்று மக்களிடம் விளக்குங்கள், லாக்டவுன் சிறப்பான நடவடிக்கை, சிறப்பாக திட்டமி்ட்டிருந்தால் ஏன் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று விளக்கமாக மக்களிடம் தெரிவியுங்கள்

காங்கிரஸ் கட்சி சிறந்த எதிர்க்கட்சியாக இருந்து தனது கடமையைச் சிறப்பாகச் செய்து வருகிறது. மத்திய அரசு செய்யும் பணிகளில், கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்புகிறது. இதுபோன்ற முட்டாள்தனமான அறிக்ைக விடுவதற்கு பதிலாக ஆளும் கட்சி நாங்கள் எழுப்பும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்”

இ்வ்வாறு அனில் குமார் தெரிவி்த்துள்ளார்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!


COVID-19 pandemicBJP MP hitsGandhis for ‘triggering panic’West Delhi BJP MP Parvesh VermaSonia GandhiRahul Gandhi and Priyanka Gandhi Vadra should be “quarantined”பாஜக எம்பி பர்வேஷ் வர்மாசோனியா காந்தி குடும்பத்தாருக்கு தனிமை முகாம்காங்கிரஸ் பதிலடிலாக்டவுன் தோல்விமக்களை பதற்றப்படுத்தும் சோனியா குடும்பத்தார்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author