Published : 25 May 2020 10:49 PM
Last Updated : 25 May 2020 10:49 PM

உம்பன் புயலில் மின்சார பாதிப்பு; ஆர்.கே சிங் ஆலோசனை

மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று காணொலி காட்சி மூலம் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அம்பன் புயலுக்குப் பிறகு மின்சார அமைப்புகள் மறுசீரமைக்கப்படும் பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது தனது பேச்சில் சிங் மின்சார அமைப்புகளைப் பொறுத்தளவில் புயல் ஏற்படுத்திய சீரழிவு அதிக அளவாக உள்ளது, ஆனால் மறுசீரமைப்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டார். மாநிலங்களுக்கு இடையிலான மின் விநியோக அமைப்பு ஒரு சில மணி நேரங்களிலேயே மறுசீரமைக்கப்பட்டு விட்டது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளூர் மின்சார இணைப்பை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள மத்திய மின்சார பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை அனுப்பி வைத்தன. இன்று மாலைக்குள் ஒடிசாவில் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு பெறும் என்று தான் நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார். கொல்கத்தாவின் பல பகுதிகளிலும் மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களிலும் வேலை இன்னும் நடைபெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே பணியாளர்களை அனுப்பி உதவிகள் செய்திருந்தாலும் கூட என்டிபிசி மற்றும் பவர்கிரிட் மூலம் மேலும் கூடுதலான பணியாளர்களை அனுப்பி அவர்கள் மேற்கு வங்க மின்சாரத் துறையுடன் சேர்ந்து மறுசீரமைப்பு பணிகளில் உதவ வேண்டும் என்று அமைச்சர் அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநில அரசு கேட்கும் உதவிகளைச் செய்யும் வகையில் அவர்கள் அரசோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள். சூப்பர் புயலான அம்பான் தாக்கி இருக்கும் சூழலில் மின்சார விநியோகத்தை எதிர்கொள்வதற்கான போதுமான முன்னேற்பாடுகள், ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளும் போது கடந்த செவ்வாய்கிழமை மின்சார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் பின்னணியில் இந்த ஆய்வுக்கூட்டத்தைப் பார்க்க வேண்டும்.

பி.ஜி.சி.ஐ.எல் மற்றும் என்.டி.பி.சி ஆகியன புவனேஸ்வரத்திலும் கொல்கத்தாவிலும் 24X7 கட்டுப்பாட்டு அறைகளை நிர்மாணித்து இருந்தன. சேதம் ஏற்பட்டால் மாநில மின்சாரத் துறைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அமைச்சகம் உறுதி அளித்து இருந்தது. புயலால் மாநில மின் விநியோகத் தடங்கள் மற்றும் இதர மின்சார உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டால் அமைச்சகம் உதவுவதாகக் கூறி இருந்தது. ஏற்கெனவே முக்கியமான இடங்களில் அவசரகால மறுசீரமைப்பு அமைப்புகள் (ERS) நிறுவப்பட்டதுடன் (400கிவாட் 32 மற்றும் 765 கிவாட் 24) போதுமான பணியாளர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

மின் விநியோகக் கோபுரங்கள் இடிந்து விழுந்து விட்டால் மற்றும் விநியோகக் கம்பிகள் அறுந்து விட்டால் பயன்படுத்தும் வகையில் இவை நிர்மாணிக்கப்பட்டு இருந்தன.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x