

கடந்த 4 நாட்களுக்கு முன்புமேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் உம்பன் புயல் தாக்கியது. மேற்கு வங்கத்தில் கடந்த 20 வருடத்தில் இல்லாத அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கு தற்போதுகரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கரோனா பிரச்சினையால் அங்கு புயல் நிவாரணப் பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. இதனால் ராணுவ வீரர்கள்நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புயல் பாதித்த வடக்கு 24 பர்கானா உள்ளிட்ட பல மாவட்டங்கள் மற்றும் கொல்கத்தாவின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் இன்னும் தொடங்கவில்லை. இதனால்மீட்பு, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
இது மிகப்பெரிய இயற்கைப் பேரிடர். குறைந்தது 1,000 குழுக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களும் இரவு பகல் பாராமல் மீட்பு, நிவாரணப் பணிகளை செய்து வருகிறார்கள்.
எனவே, விரைவில் இயல்புநிலை திரும்பும். அப்படி இல்லைஎன்றால், நான் மன்னிப்பு கேட்கிறேன் அல்லது என் தலையைநீங்கள் வெட்டிவிடுங்கள்.
இவ்வாறு மம்தா பானர்ஜிகூறினார்.- பிடிஐ