

கேரளாவின் காசர்கோடு மாவட்டம்,பேளூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்,பலா மரத்தில் ஏறி பலாப்பழங்களை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பலாப்பழம் அவரதுகழுத்தில் விழுந்தது. இதன்காரணமாக கழுத்து, கை, கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
உடனடியாக கண்ணூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் செய்ததில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தது.
இதுகுறித்து மருத்துவர் சுதீப் கூறியதாவது:
ஆட்டோ ஓட்டுநர் வெளிநாடு, வெளிமாநிலம் செல்லவில்லை. வைரஸ் தொற்றுள்ள யாருடனும் தொடர்பில் இல்லை. அவரது ஆட்டோவில் பயணம் செய்த யாரோஒருவர் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம். அவரது குடும்பத்தினரை தனி்மைப்படுத்தி உள்ளோம். அவர் சந்தித்தஅனைவரையும் சுகாதார ஊழியர்கள் தேடி வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காசர்கோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.