Last Updated : 23 May, 2020 12:17 PM

 

Published : 23 May 2020 12:17 PM
Last Updated : 23 May 2020 12:17 PM

200 ரயில்கள், 870 விமானங்கள் இயக்கம்: இயல்பு நிலை விரைவில் திரும்பும் என மத்திய அரசு நம்பிக்கை

வரும் 25-ம் தேதிக்குப்பின் 870 விமானங்கள், 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளதால் ‘கரோனாவிலிருந்து விரைவில் மக்கள் விடுபட்டு, இயல்புவாழ்க்கைக்கு வந்துவிடுவார்கள்’ என மத்திய அரசு நம்புகிறது.

இதுவரை மே 1-ம் தேதியிலிருந்து 2,317 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் 31 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு சென்றுள்ளனர் என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 3 கட்டங்களாக ஊரடங்கைக் கடைபிடிக்க உத்தரவிட்டிருந்த மத்திய அரசு 4-வது லாக்டவுனில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து சொந்த மாநிலத்தில் சேர்க்க ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும், கடந்த 12-ம் தேதியிலிருந்து டெல்லியில் இருந்து 15 சிறப்பு ாாஜ்தானி ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன

இந்நிலையில் மக்களை இயல்புவாழ்க்கைக்கு கொண்டுவரும் நோக்கில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்களை முக்கிய நகரங்களுக்கு இயக்க முடிவெடுத்து, டிக்கெட் முன்பதிவையும் தொடங்கிவி்ட்டது.

இதற்கிடையே வரும் 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான ேசவையும் தொடங்க உள்ளது. இந்த உள்நாட்டு விமான சேவையில் நாடுமுழுவதும் 870 விமானங்கள் இயக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதன் மூலம்1.30 லட்சம் பயணிகள் பயணிப்பார்கள் எனத் தெரிகிறது

200 ரயில்கள் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இயக்கப்படும் நிலையில் அதில் பயணிக்க இதுவரை 5 லட்சத்து 72 ஆயிரத்து 219 டிக்கெட்டுகள் விற்றுத் தீ்ர்ந்துள்ளன. ஏறக்குறைய 12 லட்சத்து 54 ஆயிரத்து 706 பயணிகள் மே 21-ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர் என ரயில்வே தெரிவிக்கிறது.

கடந்த ஏப்ரல் 30ம் தேதி முதல் மே 6-ம் தேதிக்குள் 27.15 லட்சம் மக்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். மே 7-ம் தேதி முதல் 12-ம் தேதிவரை 39.71 லட்சம் மக்கள் தொந்த மாநிலத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என மத்தியஅரசு தகவல்கள் தெரிவிக்கின்றன

வரும் நாட்களில் இன்னும் மக்கள் அதிகளவு தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் விமானப்போக்குவரத்து தொடங்கியபின் மாநிலங்களுக்கு இடையே மக்கள் செல்வது அதிகரிக்கும்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மத்திய அரசு இயக்கி வரும் ஷ்ராமிக் ரயில்கள் இதுவரை 2 ஆயிரத்து 317 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.அதில் 31 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர் என ரயில்வே தெரிவிக்கிறது.

ஆதலால் வரும் நாட்களில் விமானப்போக்குவரத்து, ரயில்கள் இயக்கப்படுவது அதிகரிப்பு போன்றவற்றால் மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x