

கோவிட் 19க்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் தடுப்பு மருந்து என்று பரிந்துரைத்த ஆனால் திறன் சோதிக்கப்படாத ஹோமியோபதி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம் 30 என்ற மருந்தை ரித்தி குருசாங்கே என்பவர் 10,000 பாட்டில்களை விநியோகித்துள்ளார்.
இன்னொரு நகராட்சி அதிகாரி பிரவீன் சேதா 4 நாட்களில் 25,000 பாட்டில்கள் ஆர்செனிகம் ஆல்பம் மாத்திரைகளை விநியோகித்ததும் தெரியவந்துள்ளது.
பரந்துபட்ட மூச்சுக்குழல் பிரச்சினைக்குக் கொடுக்கப்படும் ஆர்செனிக்கம் ஆல்பம் 30 என்ற மருந்து கரோனா வைரஸை எதிர்த்துப் போராடும், தடுக்கும் என்பதற்கான எந்த ஒரு சான்றும் இல்லை. ஆனாலும் இதன் தேவை வானளாவ உயர்ந்துள்ளது, இது எப்படி? இப்படி சோதிக்காமல் பெரிய அளவில் இந்த மருந்தைப் பயன்படுத்துவது மக்களிடையே ஒரு தவறான பாதுகாப்பு உணர்வை வளர்த்து விடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வெறும் வயிற்றில் ஒருநாளைக்கு ஒரு மாத்திரை வீதம் 3 நாளைக்கு என்று இதன் டோஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு பாட்டிலில் 90 பொடி சைஸ் மாத்திரைகள் இருக்கும். ஆர்சனிக் ட்ரையாக்சைடு என்பதன் ‘வாட்டர் மெமரி’ இதில் அடங்கியுள்ளது. மற்றபடி ஆர்சனிக் ட்ரையாக்சைடு என்பது நச்சு ரசாயனம் ஆகும். இது பெரிய அளவில் கரைக்கப்பட்டு வெறும் நேனோ துகள்கள் மட்டுமே இருக்கும்படி தயாரிக்கப்படும். இது நச்சுத்தன்மையை அகற்றி விடும் என்று கூறப்படுகிறது.
ஹோமியோபதியின் இந்த ‘வாட்டர் மெமரி’ என்ற கருத்தாக்கம் உலகம் முழுதும் பெரும் விவாதங்களைக் கிளப்பியதாகும்.
மகாராஷ்ட்ரா கவுன்சில் ஹோமியோபதி முன்னாள் தலைவர் டாக்டர் பாகுபலி ஷா என்பவர் கூறும்போது, 2008-09 எச்1 என்1 தாக்கத்தின் போது இது பெருந்தொற்ருக்கான ஹோமியோபதி மருந்தாக குறிக்கப்பட்டது. அப்போது இது பெரிய அளவில் பயனுள்ளதகா இருந்தது. ஆனால் ஆயுஷ் அமைச்சகத்தின் தற்போதைய கோரல் சரியானதல்ல” என்றார்.