

உலக சுகாதார அமைப்பின், செயற்குழு வாரியத் தலைவராக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
உலக சுகாதார அமைப்பின் செயற் குழுவில், 34 நாடுகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.இவர்களின் பதவிக் காலம், மூன்று ஆண்டுகள். இக்குழுவின் தலைவராக, ஜப்பானைச் சேர்ந்த, ஹிரோகி நகாடனி பதவிக்காலம் முடிவடைந்தது. . இவரது பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, புதிய தலைவராக, ஹர்ஷ வர்தன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கான தீர்மானத்தை, 194 நாடுகள் அடங்கிய, உலக சுகாதார சபை அங்கீகரித்துள்ளது.
சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில், உலக சுகாதார அமைப்பின், 147வது செயற்குழு கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற்றது. இதில், ஹர்ஷ வர்தன் செயற்குழு தலைவராக பொறுப்பேற்றார். உலக நாடுகள் கரோனா பாதிப்பைச் சந்தித்துள்ள சூழலில், ஹர்ஷ வர்த்தன், உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக பொறுப்பேற்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உலகச் சுகாதார அமைப்பின் தெற்காசியக் குழு ஒரு மனதாக ஹர்ஷ வர்தனை செயற்குழு வாரிய தலைவராகத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்தன. 3 ஆண்டுகள் பதவிக்காலமாகும் இது.
பிராந்திய குழுக்களிடையே இந்தப் பதவி சுழற்சி முறையில் வகிக்கப்படுவதாகும். இது முழுநேர பணி அல்ல, செயற்குழு வாரிய கூட்டங்களில் ஹர்ஷ வர்தன் தலைமை வகிப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுகாதார சபயின் கொள்கைகள் மற்றும் முடிவுகளைச் செயல்படுத்துவதுதான் செயற்குழு வாரியத்தின் முக்கியப் பணியாகும்.
இந்த வீடியோ கான்பரன்சிங்கில் பேசிய ஹர்ஷ வர்தன், கரோனா வைரஸ் அனைத்துலக மக்கள் பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியா அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றா.ர்
இந்தியா நல்லமுறையில் கோவிட்-19க்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது, வரும் மாதங்களிலும் சிறப்பாகச் செயல்படும் என்று ஹர்ஷ வர்தன் உறுதியளித்தார். கரோனா செயல்வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக எழுந்து நின்று கரகோஷம் செய்யும் நடைமுறையையும் ஹர்ஷ வர்தன் தொடக்கி வைத்தார்.
கரோனா வைரஸ் உருவானதன் தொடர்பாக சீனா மீது விசாரணை கோரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சூழலில் ஹர்ஷ வர்தன் இந்தப் பதவியை ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.