Published : 22 May 2020 07:54 AM
Last Updated : 22 May 2020 07:54 AM

ஊரக வேலை திட்ட தொழிலாளர்களாக மாறிய ஆசிரியர்கள், ஐ.டி. ஊழியர்கள்

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தை கணிசமாக குறைத்துவிட்டன. இன்னும் சில நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பலர் வேலையிழந்து வருகின்றனர்.

குறிப்பாக, தெலங்கானா மாநிலம் யாத்ரி புவனகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி – பத்மா தம்பதி அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்படாததால் ஆசிரியர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தங்கள் குழந்தைகளையும், பெற்றோரையும் காப்பாற்றுவதற்காக அவர்கள் இருவரும் அங்குள்ள கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாயக் கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

இதுகுறித்து சிரஞ்சீவி கூறும்போது, “சம்பளம் கிடைக்காததால் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே சிரமமாக இருந்தது. குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதற்காகவே விவசாயக் கூலிகளாக பணிபுரிகிறோம். எங்களைப் போன்று ஏராளமான ஆசிரியர்களும், ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்த ஐ.டி. ஊழியர்களும் இங்கு வேலை செய்கின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x