1.70 லட்சம் பொதுச்சேவை மையங்களில் நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு: அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் : கோப்புப்படம்
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் : கோப்புப்படம்
Updated on
2 min read

ஜூன் 1-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள 100 ஜோடி ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இரண்டு மணிநேரத்தில் 1.50 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன என்று ரயில்ேவ அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தெரிவித்தார்

மேலும் வெள்ளிக்கிழமை முதல் நாடுமுழுவதும் 1.70 லட்சம் பொதுச்சேவை மையத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நாடுமுழுவதும் ரயில் போக்குவரத்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இயக்கப்படவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்தில் சேர்க்க சிறப்பு ஷ்ராமிக் ரயில்களும், 15 நகரங்களுக்கு சிறப்பு ராஜ்தானி ரயில்களும் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 100 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்தது. இதன்படி, துரந்தோ, சம்ப்ர்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க முடிவு செய்தது. இந்த ரயில்களில் ஏசி பெட்டிகள், ஏசி அல்லாத பெட்டிகளும் இணைக்கப்படும்

தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் போலவே இந்த ரயில்களும் இயக்கப்படும், முக்கிய நகரங்களான மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது. இதற்கான அட்டவணையையும் ரயில்வே நேற்று வெளியிட்டது

இந்த 100 ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படாது. ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே இந்த ரயிலில் 2-வது வகுப்பு இருக்கையில் கூட யணிக்க முடியும்.

இந்த 100 ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 10 மணி்க்கு ஐஆர்சிடிசி இணையதளத்தில் தொடங்கியது. ஏறக்குறைய 2 மணி்நேரத்தில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 25 பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இந்த 100 ரயில்களில் 17 ஜன் சதாப்தி ரயில்களும், 5 துரந்தோ ரயில்களும் இருக்கின்றன

இதுகுறி்து ரயில்ேவ அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளி்த்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜூன் 1-ம்தேதி இயக்கப்பட உள்ள 100 ஜோடி ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கிய 2 மணநேரத்தில் 1.50 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின. நாளை முதல்(வெள்ளிக்கிழமை) நாடுமுழுவதும் 1.70 லட்சம் பொதுச்சேவை மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும். இண்டர்நெட் இ்ல்லாத கிராமங்களுக்காக இந்த வசதி செய்யப்படுகிறது

மேலும், குறிப்பிட்ட ரயில்நிலையங்களில் மட்டும் ரயில் டிக்கெட் முன்பதிவு அடுத்த சில நாட்களில் தொடங்கப்படும். தேசத்தை இயல்புவாழ்க்கைக்கு கொண்டு சென்று வருகிறோம். எந்தெந்த ரயில்நிலையங்களைத் திறக்கலாம், டிக்கெட் முன்பதிவை நடத்தலாம் என்று ஆலோசித்து வருகிறோம். டிக்கெட் முன்பதிவில் அதிகமான பயணிகள் கூட்டம் இல்லாதவாறு கவனித்துக்கொள்ளப்படும்.

விரைவில் இன்னும் அதிகமான ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. கடந்த 1-ம் தேதி முதல் 2,050 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு 30 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், குஜராத் முதல்வர் ரூபானி ஆகியோர் ஷ்ராமிக் ரயில்களை இயக்க அதிகமான ஆதரவு அளித்தார்கள். ஆனால் மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்கண்ட் அரசுகள் ஷ்ராமிக் ரயில்களை அதிக அளவு இயக்க ஒத்துழைக்வில்லை. மேற்கு வங்கத்துக்கு இதுவரை 27 ரயில்களும், ஜார்கண்ட் மாநிலத்துக்கு 96, ராஜஸ்தானுக்கு 35 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன
இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in