

சத்திஸ்கர் மாநிலம் பீமேத்ரா மாவட்டத்தில் பஸ்-லாரி மோதிக்கொண்டு விபத்தானதில் ஒரு புலம் பெயர் தொழிலாளி மற்றும் ஓட்டுநர் பலியானார்கள்.
காயமடைந்த 8 பேர்களில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து ராய்ப்பூர்-பிலாஸ்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை 8.30 மணியளவில் தெம்ரி கிராமம் அருகே நடந்தது. புலம்பெயர் தொழிலாளர்களுடன் வந்த பேருந்து ஜார்கண்ட்-சத்திஸ்கர் எல்லையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அப்போது எதிரிலிருந்து வந்த லாரி மீது பேருந்து நேருக்கு நேர் மோதியது.
இதில் தேவ்நாத் என்ற பிஹாரைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர் மற்றும் பேருந்து ஓட்டுநர் குஹராம் சோன்வானி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலும் பிஹார், ஜார்கண்ட் தொழிலாளர்கள் எனத் தெரிகிறது, இவர்கள் மகாராஷ்ட்ராவில் லாக்டவுனில் சிக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
8 பேர் காயமடைந்துள்ளனர் இதில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், காயமடைந்தவர்கள் அனைவருமே பிலாஸ்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.