Published : 21 May 2020 01:00 PM
Last Updated : 21 May 2020 01:00 PM

உம்பன் புயல் வங்கதேசத்தை அடைந்தது; இந்தியாவில் மோசமான தாக்கம் முடிந்தது 

சூப்பர் புயல் உம்பன் தாக்கம் இந்தியாவில் ருத்ர தாண்டவமாடிவிட்டு வங்கதேசம் சென்றடைந்தது. மேற்கு வங்கம், ஒடிசாவுக்கு இனி தீங்கான விளைவுகள் எதுவும் இல்லை என்று எர்த் சயன்சஸ் அமைச்சகத்தின் காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான அறிக்கை:

சூப்பர் புயல் காற்று உம்பன் வட-வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து விட்டது, இப்போது இதன் வேகம் 27 கிமீ தான். இது மேலும் பலவீனமடைந்து இன்று காலை 5.30 மணியளவில் வங்கதேசத்தில் நிலை கொண்டிருந்தது. இது மேலும் பலவீனமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்.. மதியம் வாக்கில் மேற்கு வங்கம், ஒடிசாவில் இதன் தாக்கம் ஒன்றுமேயிருக்காது.

ஆனால் மேற்கு வங்கம், அஸாம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மழை தொடரும். வங்கக்கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம், கடல் பாதுகாப்பற்றது என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது, என்று கூறப்பட்டுள்ளது.

யாரும் வெளியே வர வேண்டாம்: தேசியப் பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தல்

அரசு பச்சைக்கொடி காட்டும் வரை அம்பான் புயல் ஆபத்து முற்றிலும் முடியும் வரை யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டா என்று மத்திய அரசு ஒடிசா, மேற்கு வங்க கடலோர மாவட்ட மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

“அனைத்தும் சரியாகிவிட்டது, என்று அரசு பச்சைக்கொடி காட்டும் வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” என்று தேசிய பேரிடர் மேலாண்மை கழகம் ட்விட்டரில் அறிவுறுத்தியுள்ளது.

இதன் தாக்கமாக பிஹாரில் இடியுடன் கூடிய மழையும் அருணாச்சலத்தில் காற்றுடன் கூடிய மழையும் அஸாம், மேகாலயாவிலும் மழை பெய்யும் என்று என்.டி.எம்.ஏ. எச்சரித்துள்ளது.

-ஏஎன்ஐ தகவல்களுடன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x