Last Updated : 20 May, 2020 10:40 AM

 

Published : 20 May 2020 10:40 AM
Last Updated : 20 May 2020 10:40 AM

புலம் பெயர் தொழிலாளியின் 6 வயது மகள் லாரியில் அடிபட்டு பலி- பேருந்தைப் பிடிக்கும் முயற்சியில் உ.பி.யில் சோகம்

உத்தரப் பிரதேச மாநிலம் மெய்ன்புரியில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவரின் 6 வயது மகள் லாரியில் அடிபட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து செவ்வாயன்று எதாவா-மெய்ன்புரி எல்லையில் கிஷ்னி பகுதியில் நடந்தது. புலம்பெயர் தொழிலாளர் குடும்பம் ஒன்று குருகிராமிலிருந்து உ.பி. சீதாப்பூர் மாவட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.

இவர்களுடன் 13 மற்ற புலம்பெயர் தொழிலாளர்களும் பாதுகாப்பற்ற ஒரு லாரியிலிருந்து இறக்கிவிடப்பட்டு மெய்ன்புரி எல்லையில் உள்ள ஒரு பேருந்தில் சென்றுஅமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்தப் பேருந்துக்குச் செல்லும் போதுதான் லாரியில் அடிபட்டு தொழிலாளரின் 6 வயது மகள் பலியாகியுள்ளார்.

ஷிவ் குமார் என்ற தினக்கூலி இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறும்போது இவரது குடுமம் மற்றும் சில நெருக்கமான உறவினர்கள் குருகிராமிலிருந்து திங்களன்று நடக்கத் தொடங்கினார்கள். பிறகு ஒரு லாரியில் லிஃப்ட் கேட்டு ஏறியுள்ளனர்.

செவ்வாயன்று எதாவா-மெய்ன்புரி எல்லையில் போலீஸார் இவர்களை தடுத்து நிறுத்தினர்.

லாரியில் அடிப்பட்ட சிறுமி பலியானதையடுத்து அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஓட்டுநர் தப்பியோடிவிட்டதாகவும் போலீஸ் எஸ்.பி. அஜய்குமார் தெரிவித்தார். ”விரைவில் அவரைக் கைது செய்வோம்” என்றார்.

இதனையடுத்து ட்ரைவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல அவர்களுக்கு ஆம்புலன்ஸ் ஏற்பட்டு செய்து தந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x