உத்தரப் பிரதேச சாலை விபத்தில் 6 விவசாயிகள் பலி

சம்பவ இடத்தின்புகைப்படம்.
சம்பவ இடத்தின்புகைப்படம்.
Updated on
1 min read

உத்தரப்பிரதேச மாநிலம் எடாவாவில் பிரெண்ட்ஸ் காலனி அருகே இரண்டு லாரிகள் மோதிக்கொண்டதில் விவசாயிகள் 6 பேர் பலியாகினர் ஒருவர் காயமடைந்தார்.

“பலாப்பழங்களை ஏற்றிக் கொண்டு விற்பனைக்காகச் சந்தைக்கு எடுத்துச் சென்ற விவசாயிகள் 6 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்த ஒரு நபர் சாய்ஃபாய் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று மாவட்ட அதிகாரி ஆர்.சிங் தெரிவித்தார்.

இதனையடுத்து உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததோடு இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவருக்கு ரூ.50,000 நிவாரணமும் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியும் பலியான 6 விவசாயிகள் குடும்பத்துக்குத் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அளிப்பதாக அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in