

வெளிமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக வரும் 22-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சி களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமை வகிக்கிறார். இதில் 15 கட்சிகள் பங்கேற்கின்றன.
கரோனா வைரஸ் ஊரடங்கு காரண மாக வாழ்வாதாரம் இழந்திருக்கும் லட்சக் கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர் கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். அவர்களில் பலர் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் கால் நடையாகவும் பலர் லாரி, வேன் உள் ளிட்ட வாகனங்கள் மூலமாகவும் செல்கின் றனர். இருந்தபோதிலும், போதிய உணவு இல்லாமலும், கடும் வெயிலில் பயணம் செய்வதாலும் அவர்களில் சிலர் பாதி வழியிலேயே உயிரிழக்கின்றனர்.
ஆனால், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவோ அல்லது வாகன வசதி மற்றும் நிவாரண உதவிகளையோ வழங்க மத்திய அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், வெளிமாநிலத் தொழி லாளர்களின் இந்த அவலநிலையை போக்குவது தொடர்பாக டெல்லியில் வரும் 22-ம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோ சனை நடத்தவுள்ளன. 15 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமை வகிப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.