Published : 20 May 2020 06:57 AM
Last Updated : 20 May 2020 06:57 AM

இன்று கரையை கடக்கிறது ‘உம்பன்’ புயல்; அனைத்து உதவிகளும் செய்ய தயார்- மேற்கு வங்க முதல்வர் மம்தாவிடம் அமித் ஷா உறுதி

‘உம்பன்’ சூப்பர் புயல் வலுவிழந்து அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இது, மேற்கு வங்கம் - வங்க தேசத்தின் கத்தியா தீவு இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:

‘உம்பன்’ புயல் நேற்று (மே 19) மாலை 4 மணி நிலவரப்படி ஒடிசா கடற்கரையின் தெற்கே 420 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கக் கடற்கரையின் தெற்கே 570 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது, வடகிழக்கு திசையை நோக்கி மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.

இன்று (மே 20) மாலை மேற்கு வங்கத்தின் ‘திகா’ என்ற இடத்துக்கும் வங்கதேசத்தின் ‘கத்தியா’ தீவுகளுக்கும் இடையே உம்பன் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப் போது மணிக்கு 155 முதல் 165 கி.மீ. வேகத் திலும், இடையிடையே 185 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும். அதனால், மத்திய வங்கக் கடல் மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே, மீனவர்கள் இன்று தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி களுக்கு செல்ல வேண்டாம். புயல் கரையைக் கடக்கும்போது மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா வடக்கு கடற்கரைப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருது நகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன்கூடிய மிதமான மழை பெய்யும்.

ஆலோசனை

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மேற்கு வங்கம், ஓடிசா முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலை பேசியில் நேற்று ஆலோசனை நடத்தினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் நேற்று காலை தொலைபேசியில் பேசிய அமித் ஷா, புயலை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.

இதேபோல, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் குடன் பேசிய அமித் ஷா, புயலை எதிர்கொள்வதற் கான முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x