Published : 19 May 2020 09:42 PM
Last Updated : 19 May 2020 09:42 PM

கரோனாவை தொடர்ந்து மிரட்டும் சூப்பர் புயல் உம்பன்; மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மேற்குவங்க அரசு அறிவுறுத்தல்

மேற்கு வங்கத்தில் நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் உம்பன் புயல் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் மக்கள் போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேற்குவங்க கடலில் மையம் கொண்டுள்ள உம்பன் கடும் சூறாவளிப் புயலானது, கடந்த 6 மணி நேரத்தில், வடக்கு – வடகிழக்கு திசையில், மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காள விரிகுடாவின் மேற்கு மத்தியப் பகுதியில், தெற்கு பாரதீப் (ஒடிசா)வுக்கு 420 கீ.மீ தொலைவிலும், தெற்கு-தென்மேற்கு திகா-வுக்கு (மேற்குவங்கம்) 570 கி.மீ தொலைவிலும் மற்றும் தெற்கு மற்றும் தென்-மேற்கு கேபுபாரா (வங்கதேசம்) 700 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

உம்பன் அதித்தீவிர புயல் மேற்கு வங்க கடற்கரையில் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என தெரிகிறது. அப்போது, மிகக்கடுமையான சூறாவளி புயலாக 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மணி நேரத்திற்கு 220 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்தப் புயலானது, 1999-ம் ஆண்டு ஒடிசாவைத் தாக்கிய சூப்பர் புயலுக்குப் பின்னர் இது மிக மோசமான புயல் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புயல் நாளை கரையை கடக்கும் நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்காளம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

மேற்குவங்க கடல் பகுதியில் மக்கள் நாளை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். புயல் பாதிப்பு முகாமில் இருப்பவர்களும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x