டெல்லியில் ஊரடங்கு தளர்வு; கடும் போக்குவரத்து நெரிசல்: அணிவகுத்த வாகனங்கள்

டெல்லியில் ஊரடங்கு தளர்வு; கடும் போக்குவரத்து நெரிசல்: அணிவகுத்த வாகனங்கள்
Updated on
1 min read

டெல்லியில் தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து வழக்கம் போல் காணப்பட்டது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் கொண்டுவரப்பட்ட ஊரடங்கின் 4-வது முறை தொடர்ந்து வருகிறது. கடந்த 3 கட்டஊரடங்கைப் போல் அல்லாமல், பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகளை மத்தியஅரசு அறிவித்துள்ளது. அதைப்பின்பற்றி ஒவ்வொரு மாநில அரசும் தளர்வுகளை அறிவித்துள்ளனர். இருப்பினும் 4-வது கட்ட லாக்டவுன் வரும் 31-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து டெல்லியில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்து நேற்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார். இதில் “ டெல்லியில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதித்த டெல்லி அரசு குறைந்த பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதித்துள்ளது. மேலும் ஆட்டோவில் ஒருவரும், இ-ரிக்சாவில் இருவரும், வாடகைக்கார்களில் இரு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதித்துளள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் சலூன்கள் திறக்கவும் அனுமதித்துள்ளது.

மார்க்கெட்டுகள், சிறு கடைகள் போன்றவற்றையும் திறக்க அனுமதித்த டெல்லி அரசு, விளையாட்டு கூடங்களில் விளையாடவும்,பார்வையாளர்கள் வரவும் தடை செய்துள்ளது. இதுபோன்ற பல்ேவறு காட்டுப்பாடு தளர்வுகளை முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்தார். இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் டெல்லியில் தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து வழக்கம் போல் காணப்பட்டது. கரோனா ஊரடங்கு நிலைக்கு முந்தைய சூழல்போன்று இருந்தது. குறிப்பிட்ட இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சாகலைகளில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒவ்வொரு இடத்தையும் வாகனங்கள் கடந்து செல்ல நீண்டநேரம் ஆனது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in