காஷ்மீர் லாக்-டவுன்: ப.சிதம்பரம் வெளியிட்ட தொடர் ட்விட்டர் பதிவுகள்

காஷ்மீர் லாக்-டவுன்: ப.சிதம்பரம் வெளியிட்ட தொடர் ட்விட்டர் பதிவுகள்
Updated on
1 min read

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கரோனா நிவாரண நிதித்தொகுப்புப் பற்றி கடும் விமர்சனங்களை முன் வைத்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தற்போது ஜம்மு காஷ்மீர் லாக்டவுன் மற்றும் மனித உரிமைகள் குறித்து தொடர் ட்வீட் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

“லாக்-டவுன் 4.0 நேற்று தொடங்கிய போது என் எண்ணங்கள் காஷ்மீர் மக்கள் பற்றி இருந்தது, லாக்டவுனுக்குள் ஒரு லாக்டவுனில் காஷ்மீர் மக்கள் வாழ்கின்றனர். மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் மெஹ்பூபா முப்தி மற்றும் அவரது மூத்த சகாக்கள் ஆகியோர் லாக்டவுன் மாநிலத்தில் இன்னும் காவலில் இருக்கின்றனர். அவர்களுக்கான மனித உரிமை அளிக்கப்படவில்லை.

10 மாதங்களாக நீதிமன்றங்கள் குடிமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் தங்கள் அரசியல் சாசன கடமைகளை எப்படி தவிர்த்து வருகின்றன என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

இப்போதாவது இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் காவலில் வைக்கப்பட்டோர் இன்னமும் காவலில் வைக்கப்பட்டுள்ளோருக்கு இழைக்கப்படும் அநீதியை புரிந்து கொள்ளட்டும்” என்று தொடர் ட்வீட்களில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in