காஷ்மீரில் தலைமைக் காவலரைக் கொன்ற தீவிரவாதிகளைப் பிடிக்க மிகப்பெரிய தேடுதல் வேட்டை

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

காஷ்மீரில் தலைமைக் காவலரைக் கொன்ற தீவிரவாதிகளைப் பிடிக்க மிகப்பெரிய அளவில் பாதுகாப்புப் படைகள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ப்ரீசால் கிராமத்தில் தலைமைக் காவலர், முகம்மது அமீன் சனிக்கிழமை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். அமீன் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள சங்கர்வாணி கிராமத்தைச் சேர்ந்தவர். காவல்அதிகாரிகளை கொன்ற தீவிரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை முதல் தீவிரப்படுத்தியுள்ளனர்.

திங்கள் கிழமை அதிகாலை, புல்வாமா மாவட்டத்தில் இரு கிராமங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல்கள் கிடைத்தன. புலனாய்வுத் துறையினரிடமிருந்து கிடைத்தத இத் தகவல்களின் அடிப்படையில் மிகப்பெரிய அளவில் பாதுகாப்புப் படைகள் குறிப்பிட்ட அக்கிராமங்களுக்கு விரைந்தன.

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

புல்வாமா மாவட்டத்தில் உள்ள முரான் மற்றும் அஷ்மந்தர் கிராமங்களுக்கு பாதுகாப்புப் படையினர் இன்று காலை விரைந்தனர். அங்கு ஒவ்வொரு வீடாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்தப் பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக புலனாய்வு தகவல்கள் தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இவ்வாறு காவல்துறை அதிகாரி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in