

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஞாயிறன்று ஷபார் தொழிற்பேட்டை பகுதியில் வாகனங்களைச் சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 29 புலம்பெயர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
“பிஹார், உ.பி.க்குச் செல்லும் இரண்டு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த சில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாலையில் சென்ற வாகனங்கள் மீது கல்லெறி தாக்குதலில் ஈடுபட்டனர், இது தொடர்பாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று ராஜ்கோட் சரக டிஐஜி சந்தீப் சிங் தெரிவித்தார்.
பிஹார், உத்தரப் பிரதேசத்துக்கான இரண்டு ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக எழுந்த வதந்திகளை அடுத்து தொழிலாளர்கள் ஆத்திரமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரயில்வே அதிகாரி பரமேஷ்வர் கூறும்போது, “ராஜ்கோட் டிவிஷன் எந்த ரயிலையும் கேன்சல் செய்யவில்லை. நேரத்தையும் மாற்றவில்லை. விதிவிலக்கின்றி ரயில்கள் இயக்கப்படவே செய்தன.” என்றார்.