

இணையதள வசதி இல்லாத கிராமங்களில் இருக்கும் குழந்தைகளுக்காக ஸ்வயம் பிரபா டிடிஎச் சேவை மூலம் பள்ளிக் கல்விக்காக கூடுதலாக 12 சேனல்கள் தொடங்கப்படும். ஆன்லைன் கல்வி வழி அதிகரிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். கடந்த புதன்கிழமை முதல் ரூ.20 கோடிக்கான சுயசார்பு பொருளாதாரத்துக்கான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.
சுயசார்பு பொருளாதாரத்துக்காக இதுவரை ஐந்து கட்டங்களாகத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகளின் மொத்த மதிப்பு ரூ.11 லட்சத்து 2 ஆயிரத்து 650 கோடியாகும்.
முதல் கட்டமாக நிர்மலா சீதாராமன் ரூ 5 லட்சத்து 94 ஆயிரத்து 550 கோடிக்குத் திட்டங்களை அறிவித்தார். 2-வது கட்டமாக ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கோடிக்கும், 3-வது கட்டமாக ரூ.1.50 லட்சம் கோடிக்கும், 4-வது மற்றும் 5-வது கட்டமாக ரூ.48 ஆயிரத்து 100 கோடிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி அளித்துள்ள சலுகைகளின் மதிப்பு ரூ.8 லட்சத்து ஆயிரத்து 603 கோடிக்குத் திட்டங்களை அறிவித்துள்ளதால் ஒட்டுமொத்தமாக ரூ.20.97 லட்சத்துக்குத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 5-வது கட்ட அறிவிப்புகளில் கல்விக்கான திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதில் உள்ள அம்சங்கள்:
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.