ஆம்பன் புயல் அதிதீவிரமாக மாற வாய்ப்பு; மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே 20ம் தேதி கரை கடக்கும்: மத்திய அரசு தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் தென்கிழக்காக நகர்ந்து அதிதீவிரப்புயலாக மாறவாய்ப்புள்ளது, வரும் 20-ம் தேதி மேற்கு வங்கக் கடற்கரை, வங்கதேச கடற்கரை பகுதி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியி்ட்டுள்ள அறிவிப்பில் “

வங்ககடலின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் மேலும் வலுவடைந்து, ஆம்பன் புயலாக மாறி, வங்கக்கடலின் தென்கிழக்காக நகர்ந்து, வடக்கு, வடமேற்காக கடந்த 6 மணிநேரத்தில் 6 கி.மீ வேகத்தில் சென்று வருகிறது. இது அடுத்த 6 மணிநேரத்தில் தீவிரமடைந்து தீவிரப்புயலாகவும், அடுத்த 12 மணிநேரத்தில் அதி தீவிரப்புயலாகவும் மாறும் என இந்திய வானிலை மையம் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இப்போது ஆம்பன் புயல் 11.4 டிகிரி வடக்காகவும்,86.0டிகிரி அட்சரேகை கிழக்காகவும் இருக்கிறது. ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து 900 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் திஹகா நகரின் தென் தென்மேற்கிலிருந்து 1,140 கி.மீ தொலைவிலும், வங்கதேசத்தின் கேபுபாரா நகரிலிருந்து தென் தென்மேற்கிலிருந்து 1,260 கிமீ தொலைவிலும் உள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இ்ந்த ஆம்பன் புயல் வங்கக்கடலில் வடக்கு வடகிழக்காக, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே சாகர் தீவு, ஹதியா தீவுப்பகுதியில் வரும் 20ம் தேதி அதிதீவிரப் புயலாக மாறி கரை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவரும் உள்துறை செயலாளர் ராஜீ்வ் கவுபா தலைமையில் நேற்று ஆம்பன் புயல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்கம், ஒடிசாவுக்கு உடனடியாக உதவிகளை வழங்க உத்தரவிடப்பட்டது.

புயலின் சூழல், நகர்ந்து செல்லும் விதம், புயலை எதிர்கொள்ள தயாராகி இருப்பது, மீட்பு நடவடிக்கைகள், உதவிகள் வழங்குவது குறித்து பேரிரடர் மேலாண்மைக் குழுக் கூட்டத்தி்ல் ஆலோசி்க்கப்பட்டது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in