Published : 27 Aug 2015 10:10 AM
Last Updated : 27 Aug 2015 10:10 AM

காஷ்மீரில் பாகிஸ்தான் குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் ஆறுதல்

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

பூஞ்ச் மாவட்டம், பாலகோட் பகுதியில் சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான் நடத்திய தாக்குத லில் பஞ்சாயத்து தலைவர், ஆசிரி யர் உள்பட பொதுமக்கள் 6 பேர் இறந்தனர். இவர்களின் குடும்பத் தினர் மற்றும் காயமடைந்தவர் களை ராகுல் நேற்று சந்தித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களின் துயரத் தில் பங்கேற்க வந்துள்ளதாக தெரி வித்த ராகுல், தங்களால் இயன்ற அனைத்து உதவிகளும் செய்வ தாக உறுதி அளித்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில், தங்களை பாதுகாப்பான இடங்க ளில் குடியமர்த்த வேண்டும். பொதுமக்கள் மற்றும் பயிர்கள், கால்நடைகள் உள்ளிட்ட அவர் களின் சொத்துகள் காப்பீடு செய்யப் பட வேண்டும் என்று கோரினர்.

இது தொடர்பாக ராகுல் பின்னர் கூறும்போது, “எல்லையில் வசிக் கும் மக்கள் அச்சமும் கவலையும் அடைந்துள்ளனர். அவர்களின் கோரிக்கை நியாயமானது. இது தொடர்பாக மத்திய அரசு நட வடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். காஷ்மீரில் பயங்கரவாத தாக்கு தலில் பாதிக்கப்படுவோருக்கு வழங்கப்படும் இழப்பீட்டை விட தங்களுக்கு குறைவாக வழங்கப் படுவதாக அவர்கள் புகார் தெரி விக்கின்றனர்” என்றார்.

ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் அம்பிகா சோனி, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் குலாம் அகமது மீர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். ராகுல் தனது பயணத்தில் ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய 3 பகுதிகளுக்கும் செல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x