கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பிய டாக்டரை அடைத்து வைத்த பக்கத்து வீட்டுக்காரர்

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பிய டாக்டரை அடைத்து வைத்த பக்கத்து வீட்டுக்காரர்
Updated on
1 min read

தெற்கு டெல்லி பகுதியைச் சேர்ந்த பெண் டாக்டர் அரசு மருத்துவமனையில் பணி புரிகிறார். கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் சமீபத்தில் தனது வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் பக்கத்து வீட்டுக்காரரான மணீஷ், கரோனா நோயாளி என்பதால் அந்த வீட்டை விட்டு வெளியேறுமாறு டாக்டரிடம் கூறியுள்ளார். ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு விட்டதாக டாக்டர் கூறியதை ஏற்காத, மணீஷ் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டி உள்ளார். இதை கேட்காததால், மருத்துவரை வீட்டுக்குள் வைத்து வெளியில் பூட்டி விட்டார் மணீஷ்.

இதுகுறித்து பெண் டாக்டர் போலீஸில் புகார் செய்துள்ளார். இதையடுத்து, டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் மணீஷ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in