Published : 16 May 2020 10:01 PM
Last Updated : 16 May 2020 10:01 PM

ஜம்மு காஷ்மீர் தொடர்பான வழக்குகளில் நிலவரம் என்ன? - மத்திய நிர்வாக தீர்ப்பாயம்  விளக்கம்

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தின் மத்திய நிர்வாக தீர்ப்பாய அமர்வுகள் தொடர்பாக அதன் தலைவர் நீதிபதி எல்.நரசிம்மரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங்குக்கு, ஜம்மு காஷ்மீர் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி கடந்த 8 ம் தேதி அனுப்பியதாக கூறப்படும் கடித்த்தின் அடிப்படையில், அச்சு மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்களில் செய்தி ஒன்று வெளியானது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் அமர்வுகள் அமைப்பது பற்றி அதில் கூறியிருப்பது போல் உள்ளது.

உயர்மட்ட அதிகாரிகள் அளவில் அனுப்பப்படும் அரசு முறையிலான கடிதம் என்பது, எழுதுபவருக்கும், அதை பெறுபவருக்கும் இடையிலான தகவல் தொடர்பாக இருக்கவேண்டும். அதுபொதுவில் வெளியிடுவதற்கானது அல்ல. அந்த செய்தி மத்திய நிர்வாக தீர்பாய அமர்வுகள் அமைப்பது தொடர்பானது என்பதால், அதுபற்றி அறிய நான் அமைச்சரை தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் அந்த கடித்தத்தையோ அதன் இ-மெயிலையோ தான் பெறவில்லை என தெரிவித்தார்.

ஊடகங்களில் வெளியான செய்தியை பார்க்கும்போது, அரசுத்துறை தொடர்பான வழக்குகள், மாற்றுதலாகி வரும் வழக்குகள் ஆகியவற்றை கையாள்வதில் தீர்ப்பாயத்தின் திறன் குறித்து தலமை நீதிபதி கவலை தெரிவித்த்து போல் உள்ளது. உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அரசுவழக்குகளையும், தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளவழக்குகளை ஒப்பிட்டு அதில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

‘பார் அண்ட்பெஞ்ச்’ என்ற வெபசைட்டில் வெளியிடப்பட்ட செய்தியில் உள்ள பல தகவல்கள், உணமையிலேயே எந்த வித்த்திலும் தேவையற்றது விரும்பத்தகாதது. இதுபற்றி உயர்நீதி மன்றத்துக்கும் எந்த கவலையும் இல்லை. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புக்கு முன், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் சுற்றுவட்டார அமர்வுகளில் நிலவையில் இருந்த வழக்குகள் 140. இந்த அமர்வுகள் கால முறைப்படி அவ்வப்போது நடந்து வந்தன.

ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில், நான் கடந்தாண்டு, நான் நிர்வாக உறுப்பினருடன் ஒரு வழக்கு விசாரணயை நடத்தினேன். துணை ஆணையர் அலுவலகத்தில் ஒரு மூலையில் உள்ள 8க்கு 10 என்ற அளவிலான சிறிய அறையில் அந்த விசாரணை நடந்த்து. அந்த இடத்தில் 2ம் நிலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்கூட செயல்படமுடியாது. ஜம்முவில் நிலைமை கொஞ்சம் நன்றாக இருந்தது. நல்ல இடம் கோரி மாநில அரசுக்கு பலமுறை வேண்டுகோள்விடுத்தும், பலன் இல்லை.அதேநேரத்தில், தீர்ப்பாயம் தனது பொறுப்புகளை குறைக்கவில்லை.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புக்குப்பின், இடம் தொடர்பான வேண்டு கோள்கள் பரிசீலிக்கப்பட்டு இடங்கள் வழங்கப்பட்டன ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கும் முன், கோவிட்-19 முடக்கம் ஏற்பட்டு விட்டது. உயர் நீதிமன்றத்தில் இருந்து வழக்குகள் இன்னும் மாற்றப்படாததால், தீர்ப்பாயத்தின் முழுஅளவிலான செயல்பாட்டை யாரும் எதிர்பார்க்கமுடியாது.

நாடுமுழுவதும் தீர்ப்பாயத்துக்கு 33 அமர்வுகள் உள்ளன. ஒவ்வொரு அமர்விலும் நிலவையில் உள்ள வழக்குகளை பொறுத்து, பல இடங்களில் அமர்வுகள் அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. அதற்குதகுந்தபடி அவ்வப்போது மாற்றங்கள் நடக்கின்றன. இடம்கிடைத்த பின்பும், உயர்நீதிமன்றத்தில் இருந்து வழக்குகள் மாற்றப்பட்ட பின்பும், நிலைமையை கவனித்துக் கொள்ள வேண்டியது தீர்ப்பாயத்தின் பொறுப்பாக இருக்கும்.

உச்சநீதிமன்றத்தில் நிலவையில் உள்ள பொதுநல வழக்குகளை முன்னிட்டு, உறுப்பினர்களின் நியமனம் தாமதமானலும், தீர்ப்பாயம் கடந்த சில மாதங்களில் 104 சதவீத வழக்களை முடித்து சாதனைபடைத்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் அரசுத்தறைவழக்க்கள் 31 ஆயிரம் நிலவையில் இருக்கும்போது, வழக்கு தொடர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கும்போது, இதற்கு தீர்ப்பாயத்தின் எந்த குறைபாடும் காரணம் அல்ல.

பல இடங்களில் அமர்வுகள் அமைப்பது, வழக்குகள் முடிவதை உறுதிசெய்வது தீர்ப்பாயத்தின் பொறுப்பு. இதில் உயர் நீதிமன்றம் கவலைப்படத் தேவையில்லை. தேவைவப்படும் போது உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் மற்றும் உதவி எடுத்துக்கொள்ளப்படும். தீர்ப்பாயத்தின் நிலைப்பாட்டை தெளிவு படுத்துவதற்காக இது வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x