

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் நேற்று மேலும் 4 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அரசு அதிகாரிகள் கே.எஸ்.க்ரோபா மற்றும் கே.சி.சம்ரியா மற்றும் ப்ராமணி தெர்மல் பவர் எனும் தனியார் நிறுவனத்தின் தலைவர் பி.திரிவிக்ரம பிரசாத் மற்றும் துணைத் தலைவர் ஒய்.ஹரிஷ் சந்திர பிரசாத் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
மேலும் பிணையத் தொகை யாக தலா ரூ.1 லட்சம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. 2008ம் ஆண்டில், இந்நிறு வனத்துக்கு ஒடிசாவில் உள்ள ராம்பியா நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறை கேடு நடந்ததாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நிலக்கரிச் சுரங்க அமைச்சகத்தின் முன்னாள் செயலர் எச்.சி.குப்தாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.