Published : 16 May 2020 08:09 AM
Last Updated : 16 May 2020 08:09 AM

ஊரடங்கு உத்தரவால் கடந்த மாதத்தில் 84% இந்தியர் வருவாய் குறைந்துள்ளது- அமெரிக்க நிறுவன ஆய்வில் தகவல்

ஊரடங்கு உத்தரவால் கடந்த மாதம் 84 சதவீத இந்தியர்களின் வருவாய் குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 10 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களது வேலையை இழந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த ரஸ்டான்டி சென்டர் ஃபார்சோஷியல் செக்டார் இன்னோவேஷன், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட விளைவுகள் குறித்துஆய்வை நடத்தியது. 27 மாநிலங்களில் உள்ள 5,800 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன்முடிவு குறித்து அந்த அமைப்பு கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வேலை பறிபோய்விட்டது. மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 84 சதவீத இந்தியர்களின் மாத வருவாய் வெகுவாகக் குறைந்துவிட்டது. பெரும்பாலான மக்கள் இனி எப்படி வாழ்க்கையை நடத்துவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

கிராமப்புறப் பகுதிகள் ஊரடங்கால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. திரிபுரா, சத்தீஸ்கர், பிஹார், ஜார்க்கண்ட், ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதத்தில் 84 சதவீத மக்கள் ரூ.3,801 அளவுக்கு வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளனர். 92 சதவீத மக்கள் ரூ.3,801 முதல் ரூ.5,914என்ற அளவிலும், 93 சதவீத மக்கள் ரூ.5,914 முதல் ரூ.8,142 என்ற அளவிலும், 85 சதவீத மக்கள் ரூ.8,142 முதல் ரூ.12,374 என்ற அளவிலும், 66 சதவீத மக்கள் ரூ.12,374 முதல் ரூ.1,01,902 என்றஅளவிலும் கடந்த மாதத்தில் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளனர்.

ஊரடங்கு நேரத்திலும் சிலருக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைத்ததால் அவர்கள் குறைந்தஅளவில் இழப்பைச் சந்தித்தனர்.மேலும் விவசாயம், காய்கறி விற்பனையாளர்கள் போன்றோருக்கு குறைந்த அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாத ஊதியம் பெறுவோர் அதிக அளவில் இழப்பை சந்தித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிகாகோ பூத் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மரியான் பெர்டிரான்ட், பொருளியல் நிபுணர் கவுஷிக் கிருஷ்ணன், பெரில்மான் ஸ்கூல் ஆப் மெடிசின் பேராசிரியர் ஹீத்தர் ஸ்கூபீல்ட் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x