Published : 16 May 2020 06:51 AM
Last Updated : 16 May 2020 06:51 AM

பொது இடங்களில் எச்சில் துப்ப தடை

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கும் பொது இடங்களில் எச்சில் துப்பவும் தடை விதிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புகை பிடிப்பவர்கள் மற்றும் புகையிலை பயன்படுத்துவோருக்கு பொது இடங்களில் எச்சில் துப்பும் வழக்கம் உள்ளது. இதனால் கரோனா வைரஸ், காசநோய், பன்றிக் காய்ச்சல், மூளை அழற்சி நோய் போன்ற தொற்று நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. புகையிலை பயன்பாடு, உலக அளவில் பொது சுகாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே, புகையிலை பொருட்கள் விற்பனைக்கும், பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கும் தடை விதிப்பதன் மூலம் சுத்தமான, சுகாதாரமான இந்தியாவை அடைய நீங்கள் உதவ முடியும்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

ஏற்கெனவே இது தொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்துள்ள ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநில அரசுகளின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர், மற்ற மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x