

ஐ.நா. சர்வதேச கடல் சட்ட தீர்ப் பாய உத்தரவையடுத்து, இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்கள் லட்டோரி, சல்வேடார் கிரோன் ஆகியோர் மீதான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
வழக்கு விசாரணை இந்தியா வில் நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை இந்தியா தாமதப் படுத்துவதாகவும், தங்கள் நாட்டின ருக்கு தூக்கு தண்டனை விதிக்க முயற்சிப்பதாகவும் கூறி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள சர்வதேச கடல் சட்ட தீர்ப்பாயத்தில் இத்தாலி முறையீடு செய்தது.
வழக்கை விசாரித்த சர்வதேச கடல் சட்ட தீர்ப்பாயம், இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை இந்தியாவும், இத்தாலியும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், இத்தாலி, இந்திய அரசுகள் செப்டம்பர் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து, வரும் 2016 ஜனவரி 13-ம் தேதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறவிருந்த நிலையில், இத்தாலிய வீரர்களுக்கு எதிரான அனைத்து வழக்கு விசாரணை நடைமுறைகளுக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.