Published : 15 May 2020 08:59 PM
Last Updated : 15 May 2020 08:59 PM

உள்நாட்டிலேயே உருவான ஐசிஜிஎஸ் சாஷே கப்பல்: நாட்டுக்கு அர்ப்பணிப்பு

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடலோர காவல்படையின் கப்பல் ”சாஷே” மற்றும் இரண்டு இடைமறிக்கும் படகுகள் சி -450 மற்றும் சி -451 ஆகியவற்றை கோவாவில் இருந்து இன்று காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஐசிஜிஎஸ் சாஷே கப்பலானது கடற்கரையில் இருந்து கடலில் தொலைதூரத்திற்கு கண்காணிப்பு வேலையை மேற்கொள்ளும் கப்பல்களின் வரிசையில் முதலாவது கப்பல் ஆகும். முழுவதும் உள்நாட்டிலேயே அதாவது கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்தக் கப்பலில் உலகத் தரம் வாய்ந்த திசைகாட்டும் மற்றும் தொடர்பியல் உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

டிஜிட்டல் முறையில் இந்த தொடக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக திரு ராஜ்நாத் சிங் ஐசிஜி மற்றும் ஜிஎஸ்எல் ஆகியவற்றுக்கு பாராட்டு தெரிவித்தார். “இந்தியாவில் கடலோரக் காவல்படையின் திறனை மேம்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இந்தக் கப்பல்கள் இணைவது மிக முக்கியமான மைல்கல்லாகும். கோவிட்-19 போன்ற சவால்கள் இருந்தபோதிலும் நாட்டின் பாதுகாப்புக்கும் பாதுகாவலுக்கும் நாம் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் மனஉறுதிக்கு இவை மிகப்பெரும் உதாரணமாக விளங்குகின்றன.

“நமது கடலின் பாதுகாவலனின்” ஆற்றல் அதிகரித்து உள்ளதற்கு ஐசிஜி மற்றும் இந்தியக் கப்பல் கட்டும் தொழில் ஆகியன நமது பெருமையாக விளங்குகின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான ”சாகர்” (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) என்பதை எடுத்துக்காட்டிப் பேசிய பாதுகாப்பு அமைச்சர், ”கடல்கள் நமது நாட்டுக்கு மட்டும் உயிர்ப்பாதைகளாக இல்லை. அவை உலகத்துக்கே வளமை தருவதாக உள்ளன. பாதுகாப்பான, பாதுகாக்கப்பட்ட மற்றும் சுத்தமான கடல்கள் நமது தேசக் கட்டுமானத்திற்கு பொருளாதார வாய்ப்புகளை

வழங்குகின்றன. இந்தியா கடல்சார் ஆற்றலைக் கொண்டுள்ள நாடாக உள்ளதோடு நமது வளமையும் கடலை பெரிதளவில் சார்ந்துள்ளது. பொறுப்பான கடல்சார் ஆற்றல் உள்ள நாடாக நாம் இருக்கும் போது, அரசுக்கு கடல்கள் முன்னுரிமை சார்ந்தவையாக உள்ளன என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

105 மீட்டர் நீளமுள்ள ”சாஷே” கப்பல் தோராயமாக 2350 டன் பாய்பொருளை இடம்பெயர்க்கிறது மற்றும் 26 நாட் என்ற அதிகபட்ச வேகத்தை அடைவதற்காக இரண்டு 9,100 கிலோ டீசல் எஞ்சின்கள் மூலம் உந்து சக்தி தரப்படும். இதன் தாங்கும் ஆற்றல் 6,000 நாட்டிகல் மைல் ஆகும். அண்மைக்கால புதிய உபகரணங்கள் மற்றும் அமைப்புகள் பொருத்தப்பட்ட இதன் வலுவான ஆதாரம் மற்றும் இலக்கை அடையும் திறன் ஆகியன இந்தக் கப்பலை கட்டளை பிளாட்பாரச் செயலை மேற்கொள்ளச் செய்கின்றன.

மேலும் ஐசிஜி-யின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கான பணிகளையும் இது மேற்கொள்ளும். இந்தக் கப்பலானது இரட்டை இஞ்சின் ஹெலிகாப்டர் ஒன்றையும் அதிவேக படகுகள் நான்கையும் மிக வேகமாக ஏறுவதற்காக காற்று அடைக்கப்பட்ட படகு ஒன்றையும் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதோடு தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடும் வகையிலும் இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடலில் எண்ணெய் சிந்தியுள்ளதால் ஏற்பட்டுள்ள மாசுபடுதலைக் குறைப்பதற்கான வரையறுக்கப்பட்ட மாசுறுதல் எதிர்வினை உபகரணத்தை ஏற்றிச் செல்லும் திறனும் கப்பலுக்கு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x