

உபெர் வாடிக்கையாளர் சேவை பிரிவின் தலைவர் ருபின் சாவ்லேவ் வெளியிட்ட அறிக்கையை, ‘டெய்லி மெயில்’ வெளியிட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட 3,700 பணியாளர்களை (14 சதவீதம்) வீட்டுக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளது. உங்கள்பணி மிகச் சிறப்பாக இருந்திருந்தாலும், இன்றே உங்களது கடைசிபணி நாள் என ருபின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஜூம் வீடியோ அழைப்பு மூலம் அவர் பணியாளர்களிடம் 3 நிமிஷம் உரை நிகழ்த்தி, இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களிடம் வீடியோ அழைப்பில் உரையாற்றும்போது சாவ்லேவ், ஒரு கட்டத்தில் தனதுஉணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுள்ளார். பணியிழக்கும் ஊழியர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியான அறிவிப்பாக இருக்கும் என்பதை தான் உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால்ஊழியர்களில் ஒரு பிரிவினர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இழப்பு தொகை
முன்னறிவிப்பு நோட்டீஸ் கூடஅளிக்காமல் ஒரே நாளில் வீட்டுக்குஅனுப்புவது சரியான நடவடிக்கைஅல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வீட்டுக்கு அனுப்பப்படும் ஊழியர்களுக்கு ஓரளவுஇழப்பு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.