Published : 13 May 2020 09:19 PM
Last Updated : 13 May 2020 09:19 PM

நாடுமுழுவதும் 642 சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே நடவடிக்கை

புதுடெல்லி

நாடு முழுவதும் இன்று வரை 642 சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கியுள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் தங்க நேரிட்ட, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் இதர நபர்கள் ஆகியோர் பல்வேறு இடங்களிலிருந்து தங்கள் மாநிலங்களுக்குச் செல்ல வசதியாக, அவர்களின் நடமாட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையை அடுத்து, இந்திய ரயில்வே, சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்தது.

13 மே 2020 வரை வரையிலான காலத்தில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து 642 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்த 642 ரயில்களும், ஆந்திரப்பிரதேசம் (3 ரயில்கள்) பீகார் (169 ரயில்கள்), சட்டீஸ்கர் (6 ரயில்கள்), இமாச்சல் பிரதேசம் (1 ரயில்) ஜம்மு காஷ்மீர் (3 ரயில்கள்), ஜார்கண்ட் (40 ரயில்கள்), கர்நாடகா (1 ரயில்), மத்தியப்பிரதேசம் (53 ரயில்கள்), மகாராஷ்டிரா (3 ரயில்கள்), மணிப்பூர் (1 ரயில்), மிசோரம் (1 ரயில்), ஒடிசா (38 ரயில்கள்), ராஜஸ்தான் (8 ரயில்கள்), தமிழ்நாடு (1 ரயில்), தெலங்கானா (1 ரயில்), திரிபுரா (1ரயில்), உத்திரப் பிரதேசம் (301 ரயில்கள்), உத்ரகண்ட் (4 ரயில்கள்), மேற்கு வங்காளம் (7 ரயில்கள்), என பல்வேறு மாநிலங்களில் நிறுத்தப்பட்டன.

ரயில்களில் ஏறுவதற்கு முன்னர் அனைத்து பயணிகளும், முறையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பயணத்தின்போது பயணிகளுக்கு இலவச உணவும், குடிநீரும் வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x