Published : 13 May 2020 09:06 PM
Last Updated : 13 May 2020 09:06 PM

கரோனா நிவாரணப் பணி: பிரதமர் கேர்ஸ் நிதியில் இருந்து ரூ. 3100 கோடி விடுவிப்பு

கரோனா நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் கேர்ஸ் நிதியில் இருந்து 3100 கோடி ரூபாயை விடுத்து பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பால் தொற்று நோயாக அறிவிக்கப்பட்ட கரோனா இந்தியர்களின் உடல் நலம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு அவசர நிலை அல்லது துயர சூழ்நிலையையும் கையாள்வதற்கான நோக்கத்துடன் இந்திய அரசு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்’ (PM CARES Fund) என்ற பெயரில் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்கு அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக மற்றும் தொழில் கூடங்கள், தனிநபர்கள், பிரபலங்கள் என பலரும் நிதியளித்து வருகின்றனர்.

இந்தநிலையில், கரோனா நிவாரண பணிகளுக்காக பிரதமர் கேர்ஸ் நிதியில் இருந்து 3100 கோடி ரூபாயை விடுத்து பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் 2000 கோடி ரூபாய் வென்டிலேட்டர்கள் வாங்குவதற்காக செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 கோடி ரூபாய் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக செலவிடப்படும் எனவும் 100 கோடி ரூபாய் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கரோனா நிவாரண பணிகளுக்காக பிரதமர் கேர் நிதியில் இருந்து 3100 கோடி ரூபாயை விடுத்து பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில் 2000 கோடி ரூபாய் வென்டிலேட்டர்கள் வாங்குவதற்காக செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 கோடி ரூபாய் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக செலவிடப்படும் எனவும் 100 கோடி ரூபாய் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x