Published : 13 May 2020 06:07 PM
Last Updated : 13 May 2020 06:07 PM

கரோனா ஊரடங்கு; 160 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகம்

கரோனா ஊரடங்கின் போது மத்திய உணவுக்கழகம் சுமார் 160 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகித்துள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதமரின் ஏழைகள் நலத் திட்டத்தின் (PMGKAY) கீழ் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான உணவு தானியங்கள் உள்ளன.

ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் தடையின்றி கோதுமை மற்றும் அரிசி வழங்குவதை இந்திய உணவுத்துறை (FCI) உறுதி செய்கிறது. அரசு FCI தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் 5 கிலோ / மாதம், பயனாளியின் கீழ் உணவு தானியத் தேவைகளைப் பூர்த்தி செய்ததோடு மட்டுமல்லாமல், பிரதமரின் ஏழைகள் நலத்திட்டத்தின் (PMGKAY) கீழ் 81.35 கோடி மக்களுக்கு நபருக்கு ஐந்து கிலோ கூடுதல் ஒதுக்கீடு செய்துள்ளது.

நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய தேவையான உணவு தானியங்கள் FCI கையிருப்பில் உள்ளது. மே 1, 2020 நிலவரப்படி, கையிருப்பு நிலவரம் 642.7 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். அதில் அரிசி 285.03 லட்சம் மெட்ரிக் டன், மற்றும் கோதுமை 357.7 லட்சம் மெட்ரிக் டன் 12.05.2020 வரை இருந்த நிலையில், 159.36 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. NFSA இன் கீழ் மாநில அரசுகளுக்கு 60.87 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இது கிட்டத்தட்ட ஒன்றரை மாதத் தேவைக்கு சமம். மேலும், மொத்தம் 120 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களுடன் பிரதமரின் ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ் விநியோகிக்க 79.74 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. இது இரண்டு மாத ஒதுக்கீட்டிற்கு சமம்.

ஊரடங்கு காலத்தில் (25.03.2020 முதல் 12.05.2020 வரை) தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) மற்றும் பிரதமரின் ஏழைகள் நலத்திட்டத்தின் (PMGKAY) கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x