நோயிலிருந்து மீள நம்பிக்கையும் மனபலமுமே உதவியது: கரோனாவிலிருந்து மீண்டு வந்த 93 வயது மூதாட்டி பேட்டி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கரோனா நோயிலிருந்து மீண்டு வந்துள்ள மும்பையைச் சேர்ந்த 93 வயது மூதாட்டி, நம்பிக்கையும் மனபலமுமே நோயிலிருந்து மீள உதவியது என்று கூறியுள்ளார்.

மும்பையின் மஸ்கோன் பகுதியைச் சேர்ந்த இந்த மூதாட்டி ஏற்கெனவே நாள்பட்ட பல்வேறு நோய்களோடு போராடி வந்தவர். கரோனாவும் தொற்றிக்கொண்ட பிறகு உரிய சிகிச்சையால் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிள்ளது பலரையும் உத்வேகமடையச் செய்துள்ளது.

சிகிச்சைக்குப் பிறகான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மூதாட்டி தான் குணமடைந்து திரும்பியதைப் பற்றிக் கூறியதாவது:

கடந்த ஏப்ரல் 17 அன்று கோவிட்-19 நோய்த்தொற்று கண்டறியப்பட்டு சைஃபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது உயர் ரத்த அழுத்தம் இருந்தது. அதுமட்டுமின்றி அதற்கு முன் 8 - 10 நாட்களாக பொதுவான உடல் பலவீனத்தாலும் அவதியுற்று வந்தேன்.

ஒன்றரை வாரம் மருத்துவமனையின் கோவிட் வார்டில் சரியான சிகிச்சை மற்றும் கவனிப்புடன் இருந்தேன். தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளேன். உண்மையில் நோயிலிருந்து மீள எனக்கு உதவியது எனக்கிருந்த நம்பிக்கை மற்றும் மனபலமுமே ஆகும்.

நோயிலிருந்து மீள எனக்கு உதவிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் முழுக் குழுவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன். ஏனெனில் அவர்களது கருணை, இரக்கம் மற்றும் செயல்திறன் நான் குணமாக உதவியது''.

இவ்வாறு அந்த 93 வயது மூதாட்டி தெரிவித்தார்.

சைஃபி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் வெர்னன் தேசா கூறுகையில், ''அவரது கதை மற்ற நோயாளிகளுக்கு ஊக்கத்தைத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் கோவிட் நோயாளிகள் மேலும் கடினமாகப் போராட வேண்டுமென அவர்களை வலியுறுத்துகிறோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in