Published : 13 May 2020 11:53 AM
Last Updated : 13 May 2020 11:53 AM

தலைப்பு.. பிறகு வெற்றுப் பக்கம்: பிரதமர் அறிவித்த பொருளாதார நிவாரணம் குறித்து ப.சிதம்பரம்

கரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி.

இதனையடுத்து காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், “பிரதமர் நமக்கு தலைப்பையும் பிறகு காலிப்பக்கத்தையும் கொடுத்துள்ளார். இயல்பாக என்னுடைய எதிர்வினையென்னவெனில் வெற்றிடம்தான். நிதியமைச்சர் இந்த வெற்றிடமாக உள்ள பக்கத்தை இன்று பூர்த்தி செய்வார் என்று எதிர்பாக்கிறோம்.

பொருளாதாரத்தினுள் கூடுதலாக இடப்படும் ஒவ்வொரு ரூபாயையும் கவனமுடன் நாம் எண்ணுவோம்.

யாருக்கு என்ன கிடைக்கிறது என்பதையும் கவனத்துடன் ஆராய்வோம். முதலில் நாங்கள் கவனிப்பது என்னவெனில் ஏழைமக்களுக்கு, பசியில் வாடுவோருக்கு, சீரழிந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதையே. தங்கள் சொந்த ஊர்களுக்கு பல கிமீ நடையாய் நடந்து வந்து சேர்ந்தவர்கள் என்ன எதிர்பார்க்க முடியும் என்பதையும் அவதானித்து வருகிறோம்.

பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருக்கும் 13 கோடி அடித்தட்டு குடும்பங்களுக்கு உண்மையான பணம் என்ற அளவில் என்ன கிடைக்கிறது என்பதையும் கவனத்துடன் பார்ப்போம்” என்று ப.சிதம்பரம் தொடர் ட்வீட்களில் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x