Published : 12 May 2020 05:01 PM
Last Updated : 12 May 2020 05:01 PM

வந்தேபாரத் மிஷன்; வெளிநாடுகளில் இருந்து 6037 இந்தியர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், மே 7, 2020ஆம் தேதியில் இருந்து இதுவரை வெளிநாட்டு இந்தியர்கள் 6037 பேர் 31 விமானங்கள் மூலம் நாடு திரும்பி உள்ளனர்.

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் மே 7, 2020iல் இருந்து 5 நாட்களுக்குள் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரத்யேகமாக இயக்கிய விமானங்கள் மூலம் 6037 இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியுள்ளனர்.

வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியக் குடிமக்களைத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான மிகப் பெரிய முன்னெடுப்பு முயற்சியாக வந்தே பாரத் மிஷன் திட்டத்தை இந்திய அரசு மே 7, 2020இல் தொடங்கியது.

இந்தத் திட்டத்தின் கீழ் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமானது வெளியுறவு அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை அவர்களது தாய்நாட்டிற்குத் திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், சிங்கப்பூர், சௌதி அரேபியா, குவைத், பிலிப்பைன்ஸ், யுனைட்டட் அராப் எமிரேட்ஸ் மற்றும் மலேசியா உட்பட 12 நாடுகளில் இருந்து முதல் கட்டமாக 14,800 இந்தியர்களை இந்தியாவிற்குத் திரும்ப அழைத்து வருவதற்காக, ஏர் இந்தியா நிறுவனம் தனது துணை நிறுவனமான ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனத்துடன் இணைந்து 64 விமானங்களை (42 ஏர் இந்தியா விமானங்கள், 24 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்) இயக்குகின்றது.

விமானம் மூலம் இந்தியர்களை அழைத்து வருகின்ற இந்த மிகப்பெரியத் திட்டத்தின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் அரசாங்கமும், சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் (Director General of Civil Aviation) வகுத்துள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், (Airports Authority of India – AAI) மற்றும் ஏர் இந்தியா ஆகியன வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை வெளியேற்றி அழைத்து வரும் மருத்துவம் தொடர்பான மிஷன் திட்டத்தின் கீழ் பயணிகள்,

விமானக் குழுவினர் மற்றும் விமானம் தரை இறங்கும் செயலில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

அரசாங்க வழிகாட்டி நெறிமுறைகளுக்கு ஏற்ப விரிவாகவும் கவனமாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x