Published : 11 May 2020 09:25 PM
Last Updated : 11 May 2020 09:25 PM

அறிவியல், தொழில்நுட்பத்தின் மூலம் பொருளாதாரத்திற்கு உயிரூட்ட நடவடிக்கை:  ஹர்ஷ வர்தன்

புதுடெல்லி

கரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் வலுவாகவும், உறுதியாகவும் முன்னேறி வருகிறது என அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவிசார் அறிவியல்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று குறிப்பிட்டார்.

தேசிய தொழில்நுட்ப தினத்தைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல்- தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மொழிபெயர்ப்புகளின் மூலம் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டுவது என்ற தலைப்பில் நடைபெற்ற டிஜிட்டல் முறையிலான மாநாட்டில் அவர் பங்கேற்று உரையாற்றினார். அறிவியல்-தொழில்நுட்பத் துறை மற்றும் இந்தியத் தொழில் மகா சம்மேளனம் ஆகியவை கூட்டாக உருவாக்கியுள்ள சட்டபூர்வமான அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

நாட்டில் கரோனா வைரஸ் தாக்குதல் போன்ற சீரழிவிற்கு எதிராக அறிவியல்-தொழில்நுட்ப அமைச்சகத்தின் நடவடிக்கைகளைப் பாராட்டிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவியல் தொழில்நுட்ப இயற்கையான அமைப்பு முழுவதன் ஒத்துழைப்பு உணர்வை பிரதிபலிப்பதாகவே இத்துறையில் செயல்பாடு அமைந்திருந்தது என்பதையும் வலியுறுத்தினார்.

“இந்தத் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான தீர்வுகளைக் கண்டறிவதில் இந்திய அரசு, அறிஞர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், புதிய தொழில் தொடங்குவோர், தொழில்துறையினர் ஆகியோர் இடையறாது பாடுபட்டு வருகின்றனர். கரோனா வைரசுக்கு எதிரான உடனடியான, நடைமுறைப்படுத்தக் கூடிய தீர்வுகளைக் கண்டறிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நமது விஞ்ஞானிகள், நமது தொழில்முனைவோர், நமது நிறுவனங்கள் ஆகியவற்றை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள், தொழில்ரீதியான கூட்டுகள், மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சிகள் ஆகியவை துரிதமாக வளர்த்தெடுக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x