

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ 300 தீவிரவாதிகள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷி முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் 17 பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றன. இவற்றில் ஆயுதப் பயிற்சி பெற்ற 300 தீவிரவாதிகள் ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவ தயாராக உள்ளனர். இதனை இந்திய உளவுத்துறை கண்டுபிடித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.