Last Updated : 10 May, 2020 06:13 PM

 

Published : 10 May 2020 06:13 PM
Last Updated : 10 May 2020 06:13 PM

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடக்குமா? சபாநாயகர் ஓம் பிர்லா பேட்டி

வரும் ஜூன் மாதம் இறுதியில் வழக்கமாகத் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டப்படி நடக்குமா அல்லது கரோனா வைரஸ் காரணமாக தள்ளிப்போகுமா என்பது குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார்

மழைக்காலக் கூட்டத்தொடர் வழக்கமாக ஜூன் 20ம் ேததி அல்லது ஜூலை முதல்வாரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நடக்கும். பட்ஜெட் கூட்டத் தொடரும் திட்டமிட்டபடி நடத்த மத்திய அரசு முயன்றும் கரோனா வைரஸ் தீவிரம் காரணமாக, எம்.பி.க்கள் தங்கள் தொகுதிக்கு நிவாரணப்பணிகளை கவனிக்கச் சென்றதால், போதுமான எம்பிக்கள் அவைக்கு வரவில்லை, மேலும், கரோனா வைரஸ் பரவும் வீரியம் அதிகரித்ததால், ஏப்ரல் 3-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்த கூட்டம் மார்ச் 23-ம் தேதியே முடிக்கப்பட்டது.

இந்நிலையில் நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், ஜூன் மாதத்தில்தான் கரோனாஇந்தியாவில் உச்சமாக இருக்கும் பல்வேறு நோய் தடுப்பு வல்லுநர்கள் எச்சரித்த இருப்பதால், மழைக்காலக் கூட்டத் தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது

இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நிருபர்களுக்கு இன்று தொலைப்பேசி வாயிலாகப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ கரோனா வைரஸ் காரணாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தள்ளிப்போகாது திட்டமிட்டப்படி ஜூலை முதல்வராத்தில் நடக்கும் என நம்புகிறேன். அதேசமயம், அப்போது என்ன சூழல் நிலவுகிறதோ அதற்கு ஏற்றார்போல் முடிவு எடுக்கப்படும். ஒருவேளை தீவிரமான சமூக விலகலைக் கடைபிடித்து கூட்டம் நடத்து வேண்டியது குறித்தும் அப்போது முடிவு செய்யப்படும்

கடந்த கூட்டத்தொடரில் மக்களவையில் கட்டுப்பாட்டு அமைத்து, மாநில சட்டப்பேரவைகள ஒருங்கிணைத்து மக்களுக்கு உதவும் திட்டம் சோதனை முயற்சியாகக் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பலர் தொடர்பு கொண்டு பேசி, ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டனர்

எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் கட்சி சார்பை மறந்து இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு உதவி வருகிகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் மக்கள் நன்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் சூழலை திறம்படக் கையாள முடிந்தது, எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணியாற்ற முடிந்தது. ேதசிய தலைவர்களும், மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி, இணைந்து செயல்பட்டு கரோனா காலத்தில் சூழலை திறமையைக் கையாண்டு வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x