

உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் 7-வது இடத்தை ஆரோக்கிய சேது செயலி பெற்றுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நமக்கு அருகாமையில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்களா என்பது குறித்த தகவல்களைமக்கள் தெரிந்து கொள்வதற்காக ஆரோக்கிய சேது செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
அறிமுகம் செய்யப்பட்ட சிலவாரங்களுக்குள்ளாகவே 9 கோடி பயனர்கள் என்ற மைல்கல்லை எட்டிய ஆரோக்கிய சேதுசெயலி, இப்போது உலகின் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட 10 செயலிகளில் 7-வது இடத்தை பிடித்துள்ளது. கூகுள் பிளே மூலம் பதிவிறக்கம் செய் யப்பட்ட செயலிகள் பட்டியலில் 5-ம் இடத்தைப் பெற்றுள்ளது.
வரும் நாட்களில்11 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் மற்றும் ஸ்ட்ரீமிங் செயலியான நெட்ஃபிளிக்ஸ் போன்ற பிற பிரபலமான செயலிகளை பதிவிறக்கத்தில் முந்தி உள்ளது. ஜூம், டிக்டாக், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவை முதல் 6 இடங்களில் உள்ள செயலிகள் ஆகும்.